அங் மோ கியோவில் உள்ள காப்பிக் கடை ஒன்றில் ஜனவரி 17ஆம் தேதி அடிதடியில் ஈடுபட்ட ஆடவர்கள் மூவர் கைது செய்யப்பட்டனர்.
181 அங் மோ கியோ அவென்யூ 6ல் வெள்ளிக்கிழமை (ஜனவரி 17) நடந்த இச்சம்பவம் குறித்துத் தங்களுக்கு அன்று இரவு 11.55 மணிக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை கூறியது.
கைது செய்யப்பட்ட மூவரும் 33 வயதுக்கும் 44 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
40 வயது ஆடவரும் 36 வயது மாதும் சுயநினைவுடன் கூ டெக் புவாட் மருத்துமனைக்கு அழைத்துசெல்லப்பட்டனர்.
லேசான காயமடைந்த இருவரைக் குடிமைத் தற்காப்புப் படை பரிசோதித்ததாகவும் அவர்கள் மருத்துவமனைக்குச் செல்ல விரும்பவில்லை எனவும் படை கூறியது.
பெஹ் சியா லோர் - சிங்கப்பூர் ரோடு (Beh Chia Lor - Singapore Road) எனும் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியான காணொளியில், காப்பிக் கடைக்கு அருகில் நடந்த இந்த அடிதடி சம்பவத்தில் இரு பெண்கள் உட்பட ஒன்பது பேர் ஈடுபட்டதைக் காண முடிந்தது.
விசாரணைத் தொடர்கிறது.