சிங்கப்பூர் உச்ச நீதிமன்றத்தில் மூன்று புதிய நீதிபதிகள்

1 mins read
ef9f6b2c-8c08-404d-bb4c-4f4fe1fd561c
(கடிகார முள்திசையில் மேல் இடமிருந்து) நீதிபதிகள் ஸ்டீவன் சாங் ஹார்ங் சியாங், அலெக்ஸ் வோங் லை காக், கிறிஸ்டஃபர் டான் பெங் வீ, கிறிஸ்டி டான். - படம்: சிங்கப்பூர் நீதிமன்றம்

சிங்கப்பூர் உச்ச நீதிமன்றத்தில் மூன்று புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தற்போது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக உள்ள திரு ஸ்டீவன் சாங் ஹார்ங் சியாங்கின் பதவிக்காலம் மேலும் ஓர் ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அவர் மேல்முறையீடுகளுக்கான நீதிபதியாக உள்ளார்.

திரு ஸ்டீவன் 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக உள்ளார். அவர் 2010ஆம் ஆண்டு முதல் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தார்.

புதிய நீதிபதிகள் குறித்த தகவல்களைப் பிரதமர் அலுவலகம் புதன்கிழமை (ஜூலை 16) வெளியிட்டது.

கட்டடம், கட்டுமானம் உள்ளிட்ட சிவில் வழக்குகளைக் கையாளும் திரு அலெக்ஸ் வோங் லை காக் தற்போது உச்ச நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.

குற்றவியல், மருத்துவக் காப்பீடு, பொய்யுரைப்பது உள்ளிட்ட வழக்குகளைக் கையாளும் திரு கிறிஸ்டஃபர் டான் பெங் வீ, வங்கிகள், நன்கொடைகள், நம்பிக்கை சார்ந்த வழக்குகளைக் கையாளும் கிறிஸ்டி டான் தற்போது உச்ச நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று நீதிபதிகளையும் சேர்த்து தற்போது உச்ச நீதிமன்றத்தில் 36 நீதிபதிகள் உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்