சிங்கப்பூர்-ஆஸ்திரேலியா அமைச்சர்நிலைக் கூட்டுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சிங்கப்பூரிலிருந்து அமைச்சர்கள் மூவர் திங்கட்கிழமை (ஜூலை 27) ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகருக்குச் செல்ல இருக்கிறார்கள்.
தற்ற்காப்பு அமைச்சரும் பொதுச் சேவைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான சான் சுன் சிங், வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், எரிசக்தி, அறிவியல், தொழில்துறை அமைச்சர் டாக்டர் டான் சீ லெங் ஆகியோர் அந்த மூவர்.
இந்த மூன்று அமைச்சர்களும் ஆஸ்திரேலியாவின் துணைப் பிரதமரும் தற்காப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்ல்ஸ், வெளியுறவு அமைச்சர் பென்னி வோங், வர்த்தகம், சுற்றுப்பயணம் மற்றும் சிறப்புத் துணை அமைச்சர் டான் ஃபேரல் ஆகியோரைச் சந்தித்துப் பேசுவர்.
அதேவேளை, டாக்டர் விவியன் தெற்கு ஆஸ்திரேலிய முதல்வர் பீட்டர் மலினாக்கஸையும் சந்திப்பார்.
1966ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட சிங்கப்பூர்-ஆஸ்திரேலியா அமைச்சர்நிலைக் கூட்டுக் கூட்ட ஏற்பாடு தற்போது 15வது முறையாக நடைபெற உள்ளது.
இரு நாடுகளின் வெளியுறவு, தற்காப்பு, வர்த்தக அமைச்சர்களுக்கான உயர்நிலைக் கலந்துரையாடல் அமைப்பாக அது விளங்கி வருகிறது என்று சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 26) தெரிவித்தது.
இரு நாடுகளின் வெளியுறவு, பாதுகாப்பு மற்றும் வர்த்தக அமைச்சர்களுக்கான உயர்நிலைப் பேச்சுவார்த்தை அமைப்பு ஒன்றை அமைக்கவுள்ளதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
“இருதரப்பு உறவுக்கான உத்திபூர்வ வழிகாட்டுதலை வழங்குவதோடு, இருதரப்பினரும் ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கவும் வட்டார மற்றும் அனைத்துலக விவகாரங்கள் குறித்து கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளவும் ஏற்றதொரு தளமாக இந்த கூட்டுக் கூட்டம் அமைவதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.
இந்தக் கூட்டுக் கூட்டம் 18 மாதங்களுக்கு ஒருமுறை சிங்கப்பூரிலும் ஆஸ்திரேலியாவிலும் மாறி மாறி நடத்தப்படுகிறது. ஆகக் கடைசியாக 2024 டிசம்பரில் இருநாட்டு அமைச்சர்நிலைக் கூட்டம் சிங்கப்பூரில் நடைபெற்றது.

