உடல் எடையைக் குறைப்பதாகக் கூறப்படும் மூன்று பொருள்கள் குறித்து சிங்கப்பூர் உணவு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அவற்றில் தடை செய்யப்பட்ட பொருள்கள் இருப்பதாக அது கூறியது.
Lemo A Detox Slimming Sachets, Lemo S Detox Slimming Sachets ஆகியவற்றில் சிபுட்டிராமின் (sibutramine) எனும் தடை செய்யப்பட்ட பொருள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
Lemo D Detox Slimming Sachets-ல் சென்னோசைட் (sennoside) எனும் தடை செய்யப்பட்ட பொருள் இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த மூன்று உடல் எடைக் குறைப்புப் பொருள்களும் மலேசியாவில் தயாரிக்கப்பட்டவை.
சிபுட்டிராமின் 2010ஆம் ஆண்டிலிருந்து சிங்கப்பூரில் தடை செய்யப்பட்டுள்ளது.
அது மாரடைப்பு, பக்கவாதத்தை ஏற்படுத்தக்கூடியது என்று தெரிவிக்கப்பட்டது.
மலச்சிக்கலுக்கு மருந்தாக சென்னோசைட் பயன்படுத்தப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
அதை நீண்டகாலமாகப் பயன்படுத்துபவர்களுக்குக் குடல் தொடர்பான பிரச்சினையும் நீரிழப்பும் ஏற்படக்கூடும்.
எனவே, இந்தப் பொருள்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று அமைப்பு வலியுறுத்துகிறது.
அவற்றை உட்கொண்டவர்கள் மருத்துவரை நாட வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்படுகிறது.

