ஆசிய சதுப்புநிலப் பாதுகாப்பில் முட்டுக்கட்டைகளைச் சமாளிக்க மூன்றாண்டுத் திட்டம்

2 mins read
25a9895a-5d3e-492e-816a-a4672941019c
புளூ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளூர் அமைப்பு எடுக்கும் முயற்சிகளுக்குப் பொருளியல் வளர்ச்சிக் கழகம் ஆதரவு வழங்குகிறது. - படம்: WWF-பிலிப்பீன்ஸ்

ஆசியாவில் உள்ள சதுப்பு நிலங்களையும் கடற்புல் வாழ்விடங்களையும் பாதுகாப்பதிலும் மீட்டெடுப்பதிலும் உள்ள தடைகளைச் சமாளிக்க சிங்கப்பூர் அமைப்பு ஒன்று, மூன்றாண்டுத் திட்டத்தைத் தொடங்கி உள்ளது.

வியாழக்கிழமை (ஜனவரி 15) தொடங்கப்பட்ட ‘புளூ கார்பன்’ ஆதரவுத் திட்டத்திற்குப் பொருளியல் வளர்ச்சிக் கழகம் உதவிக்கரம் நீட்டுகிறது.

இயற்கைவளத்துக்கான உலகளாவிய நிதியம் (WWF) என்னும் அந்த உள்ளூர் அமைப்பு, கடல் வட்டார சுற்றுச்சூழலில் சேமிக்கப்படும் கரிம அளவை மதிப்பிடுவதில் உள்ள பிரச்சினைகளைச் சமாளிக்கப் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

கடலுக்குள் கைகெட்டா தொலைவில் இருக்கும் வாழ்விடங்களை அடையவும் நடப்பட்ட மரக்கன்றுகளின் ஆயுட்காலத்தை மேம்படுத்தவும் புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சதுப்புநிலக் காடுகள் கடல் புல்வெளிகள், கடலோர ஈரநிலங்கள் போன்றவை நிலத்தில் உள்ள காடுகளைக் காட்டிலும் நான்கு மடங்கு அதிகமாகக் கரிமத்தைச் சேமிக்கக்கூடியவை.

கரிம வர்த்­த­கம் மூலம் சிங்­கப்­பூர்ப் பொரு­ளி­ய­லுக்கு உத­வக்­கூ­டிய கடல்­துறை கரி­மத்தை உரு­வாக்­கு­வ­தன் மீது ஏற்கெனவே கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

கடல்துறையில் பாதுகாக்கப்படும் கரிமமே ‘புளூ கார்பன்’ என்று அழைக்கப்படுகிறது.

‘புளூ கார்­பன்’ வர்த்­த­கம் இரு நோக்­கங்­களை ஒரே நேரத்­தில் நிறை­வேற்­றக்­கூ­டி­யது. கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதோடு, இயற்கை நிறைந்த சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் நோக்கங்களை அது நிறைவேற்றுகிறது.

சுற்­றுச்­சூ­ழல் மீள்­தி­றன், சுற்­றுச்­சூ­ழல் பொறி­யி­யல் மற்­றும் கடல்­து­றை­யில் பாது­காக்­கப்­படும் கரி­மம் (புளூ கார்­பன்) போன்­றவை அவை.

தென்கிழக்கு ஆசியா, கடந்த 40 ஆண்டுகளில் தனது சதுப்புநிலக் காடுகளில் 30 விழுக்காட்டை இழந்துவிட்டது. அவற்றை மீட்டெடுப்பது எளிதன்று.

அதுகுறித்து இயற்கைவளத்துக்கான உலகளாவிய நிதியத்தைக் கரிம நிதி மற்றும் சந்தைச் செயற்குழுவின் உலகளாவிய தலைவர் ரூபன் மனோகரா விளக்கினார்.

“நடப்பில் உள்ள சதுப்புநிலப் பாதுகாப்புத் திட்டங்கள் எளிதில் தோல்வியடையக் கூடியனவாக உள்ளன.

“மோசமான திட்ட வடிவமைப்பு காரணமாகவும் போதுமான அளவீடு இல்லாததாலும் உலக அளவில் 50 விழுக்காட்டுத் திட்டங்கள் தோல்வியில் முடிகின்றன,” என்றார் அவர்.

“கடல்துறை வாழ்விடங்களில் சேமிக்கப்படும் கரிமத்தைத் துல்லியமாகக் கணக்கிடுவதும் காலப்போக்கில் மீட்புத் திட்டம் வாயிலாக எவ்வளவு கரிமம் பிரிக்கப்பட்டுள்ளது என்பதைக் கண்காணிப்பதும் அடுத்தகட்ட சவால்கள்,” என்றும் திரு மனோகரா கூறினார்.

குறிப்புச் சொற்கள்