அடுத்த இரண்டு வாரங்களுக்கு சிங்கப்பூரர்கள், இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம் என்று வானிலை ஆய்வகம் வியாழக்கிழமை (ஜனவரி 2) தெரிவித்துள்ளது.
பெரும்பாலான பிற்பகல் வேளைகளில் மிதமான மழையிலிருந்து கனத்த மழை வரை எதிர்பார்க்கலாம் என்றும் அது இரவிலும் தொடரும் என்றும் வானிலை ஆய்வகம் தனது அறிக்கையில் கூறியது.
அன்றாட வெப்பநிலை 24 டிகிரி செல்சியலுக்கும் 33 டிகிரி செல்சியசுக்கும் இடைப்பட்டிருக்கும். அது ஜனவரியின் நடுப்பகுதியில் 22 டிகிரி செல்சியசுக்கும் குறையக்கூடும்.
2024ன் கடைசி இரண்டு வாரங்கள், பல வெப்பமான மற்றும் ஈரமான நாள்களைக் கொண்டிருந்தன. பெரும்பாலும் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை கொட்டித் தீர்த்தது. வெப்பநிலை 32 டிகிரி செல்சியசுக்கும் 34 டிகிரி செல்சியசுக்கும் இடைப்பட்டிருந்தது என்றும் வானிலை ஆய்வகம் தெரிவித்தது.