தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அக்டோபர் முற்பாதியில் இடியுடன் கூடிய மழை

1 mins read
64e9b9b5-7158-4b18-8cea-8c61e14cdfa5
தென்மேற்கு பருவமழைக்காலம் முடிவுக்கு வரும் நிலையில், அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் இடைப் பருவமழைச் சூழல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சிங்கப்பூர் வானிலை மையம் புதன்கிழமை (அக்டோபர் 1) தெரிவித்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அக்டோபர் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூரெங்கும் காலையிலும் பிற்பகல் நேரத்திலும் இந்நிலை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தென்மேற்கு பருவமழைக்காலம் முடிவுக்கு வரும் நிலையில், அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் இடைப் பருவமழைச் சூழல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சிங்கப்பூர் வானிலை மையம் புதன்கிழமை (அக்டோபர் 1) தெரிவித்தது.

இடைப் பருவமழைக் காலத்தில் இலேசான மற்றும் வேகம், திசை ஆகியவை மாறுதலுக்கு உட்பட்டு காற்று பலமாக வீசக்கூடும் என்றும் மின்னல் அதிகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

பெரும்பாலான நாள்களில் அன்றாட அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியசுக்கும் 34 டிகிரி செல்சியசுக்கும் இடைப்பட்டிருக்கும்.

சில நாள்களில் வெப்பநிலை 34 டிகிரி செல்சியசுக்கும் சற்று அதிகமாக இருக்கும் என்று முன்னுரைக்கப்படுகிறது.

அக்டோபர் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் சிங்கப்பூரின் பெரும்பாலான பகுதிகளில் மொத்த மழை அளவு கிட்டத்தட்ட சராசரியான அளவில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்