சிங்கப்பூரில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு, சில நாள்களில் காலை பின்னேரத்திலும் பிற்பகலிலும் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதோடு, தீவின் சில பகுதிகளில் குறுகிய நேரத்திற்கு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வகம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரையும் சுற்றியுள்ள வட்டாரத்தையும் தென்மேற்குப் பருவக்காற்று நோக்கி வீசுவதே அதற்குக் காரணம்.
இருப்பினும், வெப்பத்திலிருந்து நிவாரணம் கிடைப்பதற்கான சாத்தியம் இல்லை என்று கூறப்படுகிறது.
பல நாள்களில் அன்றாட அதிகபட்ச வெப்பநிலை 32க்கும் 34 டிகிரி செல்சியசுக்கும் இடைப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சில இரவுகளில் சூடாகவும் ஈரத்தன்மை அதிகமாகவும் இருக்கலாம் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது. வெப்பநிலை 28 டிகிரி செல்சியசுக்கு மேல் இருக்கக்கூடும் என்று சிங்கப்பூர் வானிலை ஆய்வகம் தெரிவித்தது.
ஆகஸ்ட் மாதத்தின் கடைசி வாரத்தில், சில நாள்களில் காற்றோட்டமாக இருக்கும் என்றும் அது கூறியது.
தீவின் பெரும்பாலான பகுதிகளில், ஆகஸ்ட் மாதத்தின் பிற்பாதியில் மொத்த மழை அளவு சராசரி அளவைவிட குறைவாக இருக்கும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.


