அக்டோபரின் முதல் பாதியில் இடியுடன் கூடிய மழை: வானிலை சேவை

அக்டோபரின் முதல் பாதியில் இடியுடன் கூடிய மழை: வானிலை சேவை

1 mins read
0ed8a472-c9bc-4c00-accd-8308df3e6fae
பெரும்பாலான நாள்களில் மதிய வேளையில் தீவின் சில பகுதிகளில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அக்டோபரின் முதல் இரண்டு வாரங்களில் இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம்.

பெரும்பாலான நாள்களில் மதிய வேளையில் தீவின் சில பகுதிகளில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில நாள்களில் அது இரவுவரை நீடிக்கக்கூடும் என்று சிங்கப்பூர் வானிலை சேவை முன்னுரைத்துள்ளது.

அக்டோபரின் முதல் வாரத்தில் லேசான காற்று வீசக்கூடும் என்றும் அதிக மின்னல்கள் ஏற்படக்கூடும் என்றும் வானிலை ஆய்வகத்தார் தெரிவித்தனர்.

முதல் இரண்டு வாரங்களில் சில நாள்களில் அன்றாட அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியசுக்கும் மேலாக இருக்கக்கூடும். இருப்பினும் பெரும்பாலான நாள்களில் அது 32 டிகிரி செல்சியசுக்கும் 34 டிகிரி செல்சியசுக்கும் இடைப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

செப்டம்பர் மாதத்தின் கடைசி இரண்டு வாரங்களில் அன்றாட அதிகபட்ச வெப்பநிலை பெரும்பாலான நாள்களில் 33 டிகிரி செல்சியசைத் தாண்டியது.

அங் மோ கியோவில் செப்டம்பர் 22ஆம் தேதி ஆக அதிகமாக வெப்பநிலை 35.7 டிகிரி செல்சியசாகப் பதிவானது.

அதோடு, நாட்டின் பல பகுதிகளில் சராசரி அளவைவிட அதிகமான மழை அளவும் பதிவானது.

குறிப்புச் சொற்கள்