திபெத்-நேப்பாள வெள்ளம்: ஒன்பது சிங்கப்பூரர்களைக் காணவில்லை

திபெத்-நேப்பாள வெள்ளம்: ஒன்பது சிங்கப்பூரர்களைக் காணவில்லை

1 mins read
98b02b20-49d0-49c8-b107-6adba675dbef
ஆகஸ்ட் 27ஆம் தேதியன்று, நேப்பாளத்தின் நுவாகோட் மாவட்டத்தில் உள்ள திரிஷூலியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து, வீடுகள் சேற்றில் மூழ்கிக் கிடப்பதை வான்வழிக் காட்சி காட்டுகிறது. - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

நேப்பாள சுற்றுலாக் கழகத்தின் அண்மைய அறிக்கையின்படி, திபெத்-நேப்பாள வெள்ளத்தில் ஒன்பது சிங்கப்பூரர்கள் காணாமல் போயிருக்கின்றனர்.

காணாமல் போன ஒன்பது சிங்கப்பூர் பயணிகள் உட்பட 644 பேரை மலையேற்றம் மற்றும் பயண நிறுவனங்கள் அடையாளம் கண்டுள்ளதாக சுற்றுலாக் கழகம் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 27) தெரிவித்தது.

“பயண நிறுவனங்கள், சுற்றுலா வழிகாட்டிகள், உள்ளூர் அதிகாரிகள், பாதுகாப்பு அமைப்புகளால் ஒருங்கிணைந்து இந்தத் தகவல்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன,” என்று கழகம் தெரிவித்தது.

நேப்பாளத்தின் திபெத் எல்லையருகே ஏற்பட்ட வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, சுற்றுலாக் குழுவுடன் பயணம் செய்த இரண்டு சிங்கப்பூரர்கள் அங்கு காணாமல் போயுள்ளதாக அவர்களது சுற்றுலா நிறுவனம் தெரிவித்துள்ளதாக ஏஎஃப்பி செய்தி வெளியிட்டுள்ளது.

47 உறுப்பினர்களைக் கொண்ட அந்தக் குழுவில் 15 ஆஸ்திரேலியர்கள், 10 கனடியர்கள், ஒன்பது நேப்பாளியர்கள், எட்டு அமெரிக்கர்கள், இரண்டு பிரிட்டிஷ்காரர்கள், ரஷ்ய-அமெரிக்க இரட்டைக் குடியுரிமை பெற்ற ஒருவர் ஆகியோரும் அடங்குவர்.

குறிப்புச் சொற்கள்
பயணம்சிங்கப்பூர்பயணிகள்ஏஎஃப்பி