‘டிஜேசி’ குழு அதன் இணையத் தளங்கள் மூலம் நிதி பெறுவதற்குத் தடை

‘டிஜேசி’ குழு அதன் இணையத் தளங்கள் மூலம் நிதி பெறுவதற்குத் தடை

2 mins read
7db727bb-6d55-4fb5-8131-f93e7ef3d29b
இந்தக் குழுவானது ஒரு தனி நிதியை நடத்துகிறது. அது மரண தண்டனைக் கைதிகளின் குடும்பங்களுக்கு அவர்களின் அனைத்துலகப் பயணம், சிங்கப்பூரில் தங்குமிடம் மற்றும் இறுதிச் சடங்குகள் போன்றவற்றுக்குப் பணம் செலுத்துவதை ஆதரிக்கிறது.  - படம்: சாவ் பாவ்

மரண தண்டனைக்கு எதிர்க்கும் குழுவான ‘டிஜேசி எனும் ‘டிரான்ஸ்ஃபார்மேட்டிவ் ஜஸ்டிஸ் கலெக்டிவ்’ (Transformative Justice Collective) டிசம்பர் 21ஆம் தேதி முதல் இரண்டு ஆண்டுகளுக்கு அதன் இணையத் தளங்கள் மூலம் நிதிப் பலன்களைப் பெறுவது தடைசெய்யப்பட்டுள்ளது.

2024 ஆகஸ்ட்டுக்கும் டிசம்பருக்கும் இடையில், சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட அக்குழுவிற்கு அதன் இணையத்தளம் மற்றும் சமூக ஊடகப் பக்கங்களில் உள்ள பொய்களுக்கு ஐந்து திருத்த உத்தரவுகள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தகவல், மின்னிக்க மேம்பாட்டு அமைச்சு டிசம்பர் 20ஆம் தேதி கூறியது.

ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம், டிக்டாக் மற்றும் எக்ஸ் ஆகியவற்றில் அக்குழுவின் இணையத்தளமும் சமூக ஊடகத் தளமும் ‘அறிவிக்கப்பட்ட இணைய இருப்பிடங்கள்’ (டிஓஎல்) என அழைக்கப்படும் என்று அமைச்சின் அண்மைய உத்தரவு கூறுகிறது.

இணையவழி பொய்ச் செய்திக்கும் சூழ்ச்சித் திறத்திற்கும் எதிரான பாதுகாப்புச் சட்டத்தின்படி, டிஓஎல் நடத்துநர்கள், இந்த நடவடிக்கைகள் வழி நிதி அல்லது வேறு எவ்வித நன்மையையும் பெற அனுமதிக்கப்படுவதில்லை.

டிஓஎல் நிலையால் டிஜேசியின் இணைய இயங்குதளங்கள் செயல்படுவதை நிறுத்த வேண்டும் என்று பொருள் கொள்ளக்கூடாது என்று அமைச்சு விளக்கியது.

ஆனால் அவை ஒவ்வொருவரும் டிஓஎல்களாக அறிவிக்கப்பட்டிருப்பதையும், அவர்கள் பல பொய்களைத் தெரிவித்திருக்கிறார்கள் என்பதையும், பார்வையாளர்கள் தகவல்களை அணுகும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதையும் எச்சரிக்க ஓர் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும் அமைச்சு மேலும் கூறியது.

இந்தக் குழுவானது ஒரு தனி நிதியை நடத்துகிறது. அது மரண தண்டனைக் கைதிகளின் குடும்பங்களுக்கு அவர்களின் அனைத்துலகப் பயணம், சிங்கப்பூரில் தங்குமிடம் மற்றும் இறுதிச் சடங்குகள் போன்றவற்றுக்குப் பணம் செலுத்துவதை ஆதரிக்கிறது.

குறிப்புச் சொற்கள்