தோ பாயோவில் செப்டம்பர் 18ஆம் தேதி நிகழ்ந்த சாலை விபத்தில் 83 வயது மிதிவண்டி ஓட்டுநர் ஒருவர் மாண்டார்.
அவர் ஓட்டிச் சென்ற மிதிவண்டி மீது கார் ஒன்று மோதியதாகக் கூறப்படுகிறது.
கவனக்குறைவுடன் கார் ஓட்டி படுகாயம் ஏற்படுத்திய குற்றத்துக்காக காரை ஓட்டிய 77 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது.
இந்த விபத்து தோ பாயோ லோரோங் 6க்கும் லோரோங் 4க்கும் இடையில் உள்ள சாலைச் சந்திப்பில் நிகழ்ந்ததாக காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.
விபத்தில் காயமடைந்த முதியவரை டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அவர் சுயநினைவின்றி இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மாண்டார்.

