தோ பாயோ இரவுநேர காய்கறிச் சந்தை ஆகஸ்ட்டில் மூடல்

தோ பாயோ இரவுநேர காய்கறிச் சந்தை ஆகஸ்ட்டில் மூடல்

1 mins read
b09911d4-2932-4f13-ab6c-f6712b035421
தோ பாயோ ஈஸ்ட்டில் இருந்து ஒரு தொழில் பேட்டைக்குச் செல்லும் 200 மீட்டர் பாதையில் அந்தச் சந்தை வாரம் ஆறு நாள்கள் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை செயல்படுகிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தோ பாயோவில் இரவு நேரத்தில் செயல்படும் காய்கறி மொத்த விற்பனை சந்தை வரும் ஆகஸ்ட் 19ஆம் தேதி முதல் மூடப்படும். அப்பகுதி மறு மேம்பாடு காணும்.

தோ பாயோ ஈஸ்ட்டில் இருந்து ஒரு தொழில்பேட்டைக்குச் செல்லும் 200 மீட்டர் பாதையில் அந்தச் சந்தை வாரம் ஆறு நாள்கள் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை செயல்படுகிறது.

அங்கு செயல்படும் காய்கறி கடைக்காரர்கள் பாசிர் பாஞ்சாங் மொத்த விற்பனை நிலையம் போன்ற இதர இடங்களுக்கு மாறிக்கொள்ளலாம். அது பற்றி காய்கறி கடைக்காரர்களுக்கு பிப்ரவரி 13ஆம் தேதி தெரிவிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது.

அந்தப் பகுதியில் வீவகவின் பல்வேறு பிடிஓ வீட்டு திட்டங்கள் இடம்பெறவிருக்கின்றன.