தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எஸ் ஈஸ்வரன் சிறைத் தண்டனை அக்டோபர் 7ல் தொடங்குகிறது

2 mins read
bc911422-6c6d-491a-bfcc-ad7a0adc573b
காலை 9.20 மணியளவில் எஸ் ஈஸ்வரன் உச்ச நீதிமன்ற கட்டடத்தில் நடந்து சென்றார். செய்தியாளர்களும் புகைப்படக்காரர்களும் அவரைச் சூழ்ந்தனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரனுக்கு இன்று 12 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

அரசுத்தரப்பு 6 முதல் 7 மாதங்கள் வரை சிறைத் தண்டனைக்குப் பரிந்துரைத்து இருந்தது. ஆயினும், அது போதாது என்று நீதிபதி வின்சன்ட் ஹூங் தமது தீர்ப்பில் கூறினார்.

எஸ் ஈஸ்வரன் தமக்கு விதிக்கப்பட்ட தண்டனையை அக்டோபர் 7 முதல் தொடங்க தற்காப்புத் தரப்பு அனுமதி கோரியது. அதனைத் தொடர்ந்து அக்டோபர் 7 மாலை 4 மணிக்கு எஸ் ஈஸ்வரன் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் அவருக்கு என்ன தண்டனை கிடைக்கும் என சிங்கப்பூர் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

ஈஸ்வரன் காலை 9.20 மணியளவில் உச்ச நீதிமன்ற கட்டடத்தில் வந்திறங்கினார். அவரைச் சூழ்ந்த செய்தியாளர்களிடம் அவர் எதுவும் பேசவில்லை.

ஈஸ்வரனின் வழக்கறிஞர் தவிந்தர் சிங்கும் அங்கு வந்து சேர்ந்தார். நீதிமன்றத்தின் நான்காவது தளத்தில் பார்வையாளர் மாடத்தினுள் நுழைய ஈஸ்வரனின் குடும்பத்தினர் காத்திருந்ததை செய்தியாளர்கள் கண்டனர்.

காலை 9.50 மணியளவில் ஈஸ்வரன் நீதிமன்த்தில் வந்து அமர்ந்தார்.

பார்வையாளர் மாடத்தில் 9.45 மணியளவில் 40க்கும் மேற்பட்டோர் அமர்ந்து இருந்தனர்.

10 மணியளவில் நீதிபதி வின்சன்ட் ஹூங் நீதிமன்றத்தினுள் வந்தார்.

தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் ஐந்தை செப்டம்பர் 24ஆம் தேதி ஈஸ்வரன் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அவரது வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அந்தக் குற்றங்களுக்கு 6 மாதம் முதல் 7 மாதம் வரையிலான சிறைத் தண்டனை விதிக்க அரசுத் தரப்பு கேட்டுக்கொண்டது. ஆயினும், 8 வாரங்களுக்கு மிகாத சிறைத் தண்டனைக்கு தற்காப்புத் தரப்பு கோரிக்கை விடுத்திருந்தது.

குறிப்புச் சொற்கள்