தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘பந்தயப் பிடிப்புக் கழகத்தின் $4.2 பி. காப்பு நிதி நீண்டகாலத்துக்கு அவசியம்’

1 mins read
8d5b3357-870c-42eb-aaf1-fbb7aa389092
நிதி அமைச்சு. - கோப்புப் படம்: இணையம்

கடந்த 2022ஆம் நிதியாண்டு நிலவரப்படி சிங்கப்பூரின் பந்தயப் பிடிப்புக் கழகம் (Tote Board) சேகரித்துள்ள 4.2 பில்லியன் வெள்ளி காப்பு நிதி, நீண்டகாலத்தில் நிதியுதவி வழங்க அந்த அமைப்புக்கு வகைசெய்யும் என்று நிதி அமைச்சு கூறியுள்ளது.

அரசாங்கத்தின் வரவுசெலவு குறித்து குழு ஒன்று ஆராய்வதன் தொடர்பில் நிதி அமைச்சு அவ்வாறு சொன்னது.

கணிப்புக் குழு என்றழைக்கப்படும் அக்குழுவின் நான்காவது அறிக்கை செவ்வாய்க்கிழமை (நவம்பர் 5) வெளியிடப்பட்டது. அதில், காப்பு நிதிப் பாதுகாப்புக் கட்டமைப்பு (Reserves Protection Framework) வழங்கும் பாதுகாப்புக்கு உட்படுத்தப்படாத அரசாங்க சார்பு அமைப்புகளில் பந்தயப் பிடிப்புக் கழகத்திடம்தான் ஆக அதிகக் காப்புநிதி இருப்பது தெரிய வந்தது.

சிங்கப்பூரின் அரசியலமைப்புச் சட்டத்தின்கீழ் காப்பு நிதிப் பாதுகாப்புக் கட்டமைப்பு, சில அரசாங்க சார்பு நிறுவனங்களுக்குப் பாதுகாப்பு வழங்குகிறது.

கணிப்புக் குழு, எத்தகைய மாற்றங்களைக் கருத்தில்கொண்டு அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்டம் வரையப்படவேண்டும் என்பதை ஆராயும் பொறுப்பைக் கொண்டுள்ளது. பந்தயப் பிடிப்புக் கழகம், நிதி அமைச்சின்கீழ் வரும் அரசாங்க சார்பற்ற அமைப்பாகும்.

பொதுவாக காப்பு நிதிப் பாதுகாப்புக் கட்டமைப்பின் பாதுகாப்புக்கு உட்படுத்தப்படாத அரசாங்க சார்பற்ற அமைப்புகளிடம் கூடுதலான அளவில் காப்பு நிதி இருப்பது வழக்கம்.

குறிப்புச் சொற்கள்