தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜூலை 17 டோட்டோ குலுக்கல்: $10 மில்லியன் பரிசுத்தொகை

1 mins read
f45c4c74-2205-490f-beab-6703a82ed6fe
டோட்டோ குலுக்கலில் $10 மில்லியன் முதல் பரிசை இம்மாதம் 17ஆம் தேதி வெல்ல வாய்ப்பு. - படம்: சாவ்பாவ்

டோட்டோ குலுக்கலில் $10 மில்லியன் முதல் பரிசை இம்மாதம் 17ஆம் தேதி வெல்ல வாய்ப்பு வருகிறது. கடந்த மூன்று குலுக்கல்களில் யாரும் பரிசுத் தொகையை வெல்லவில்லை.

குலுக்கல் முடிவுகள் இம்மாதம் 17ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 17ஆம் தேதி இரவு 9 மணி வரை குலுக்கலில் பங்கெடுக்க முடியும்.

ஜூலை 7ஆம் தேதி ஒன்றாம் பிரிவில் இருந்த $1.2 மில்லியன் பரிசுத் தொகை, ஜூலை 10ஆம் தேதி $2.9 மில்லியனானது.

இம்மாதம் 14ஆம் தேதி இடம்பெற்ற குலுக்கலில் கிட்டத்தட்ட $5.8 மில்லியனான பரிசுத் தொகையை யாரும் வெல்லவில்லை.

$10 மில்லியன் பரிசுத்தொகையைக் கொண்ட கடைசி டோட்டோ குலுக்கல் ஜூன் 19ஆம் தேதி இடம்பெற்றது. அதில் ஒரே சீட்டுக்கு $12.3 மில்லியன் விழுந்தது.

அக்குலுக்கலுக்கான வெற்றி எண்கள் 1, 10, 37, 40, 45, 47. உபரி எண் 19.

2025 ஜூன் 19ஆம் தேதி நடந்த டோட்டா குலுக்கலின் வெற்றி எண்கள்.
2025 ஜூன் 19ஆம் தேதி நடந்த டோட்டா குலுக்கலின் வெற்றி எண்கள். - படம்: ஊடகம்
குறிப்புச் சொற்கள்