தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நவம்பர் 14ஆம் தேதி 10 மில்லியன் வெள்ளி ‘டோட்டோ’ அதி‌ர்‌ஷ்ட குலுக்கல்

2 mins read
b40e996d-f4d4-4f79-b334-a3f2ee4c0f93
நவம்பர் 14ஆம் தேதிக்கான அதி‌ர்‌ஷ்ட குலுக்கல் இரவு 9.30 மணிக்கு நடக்கும். 9 மணியுடன் அதி‌ர்‌ஷ்ட குலுக்கல் சீட்டுகளின் விற்பனை நிறுத்தப்படும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் பூல்ஸ் நடத்தும் ‘டோட்டோ’ அதி‌ர்‌ஷ்ட குலுக்கல் பரிசின் மதிப்பு மீண்டும் 10 மில்லியன் வெள்ளியைத் தொட்டுள்ளது.

இதற்கு முன் இடம்பெற்ற மூன்று ‘டோட்டோ’ அதி‌ர்‌ஷ்ட குலுக்கல்களிலும் யாரும் முதல் பரிசை வெல்லாததால் இம்முறை 10 மில்லியன் வெள்ளி பரிசாக மாறியுள்ளது.

நவம்பர் 4ஆம் தேதி அதி‌ர்‌ஷ்ட குலுக்கலில் குரூப் 1 பரிசான 1.241 மில்லியன் வெள்ளியை யாரும் வெல்லவில்லை.

அதன்பின்னர் நவம்பர் 7ஆம் தேதியின் அதி‌ர்‌ஷ்ட குலுக்கல் பரிசு 2.925 மில்லியன் வெள்ளியாக மாற்றப்பட்டது. அதற்கும் குரூப் 1 வெற்றியாளர்கள் இல்லை.

இந்நிலையில் நவம்பர் 11ஆம் தேதியின் அதி‌ர்‌ஷ்ட குலுக்கல் பரிசு 5.989 மில்லியன் வெள்ளியாக மாற்றப்பட்டது. ஆனால் அதற்கும் குரூப் 1 வெற்றியாளர்கள் இல்லை.

அதனால் நவம்பர் 14ஆம் தேதியின் அதி‌ர்‌ஷ்ட குலுக்கல் பரிசு 10 மில்லியன் வெள்ளியாக மாற்றப்பட்டுள்ளது.

தொடர்ந்து மூன்றுமுறை குரூப் 1 வெற்றியாளர்கள் இல்லை என்றால் நான்காவதாக நடக்கும் அதி‌ர்‌ஷ்ட குலுக்கலின் பெயர் கேஸ்கேட் (cascade) போட்டி என்றழைக்கப்படும்.

2024ஆம் ஆண்டில் மூன்றாவது முறையாக கேஸ்கேட் போட்டி நடக்கிறது.

மே மாதம் 9ஆம் தேதி நடந்த கேஸ்கேட் போட்டிக்கான பரிசு 13.125 மில்லியன் வெள்ளி. அதை ஒருவர் வென்றார்.

அக்டோபர் 21ஆம் தேதி இடம்பெற்ற கேஸ்கேட் போட்டிக்கான பரிசு 13.214 மில்லியன் வெள்ளி. அதை இருவர் வென்றனர்.

இம்முறையும் குரூப் 1 வெற்றியாளர் இல்லை என்றால் குரூப் 2 வெற்றியாளர்களுக்கு பரிசு பகிர்ந்தளிக்கப்படும்.

நவம்பர் 14ஆம் தேதிக்கான அதி‌ர்‌ஷ்ட குலுக்கல் இரவு 9.30 மணிக்கு நடக்கும். 9 மணியுடன் அதி‌ர்‌ஷ்ட குலுக்கல் சீட்டுகளின் விற்பனை நிறுத்தப்படும்.

குறிப்புச் சொற்கள்