டோட்டோ புத்தாண்டு அதிர்ஷ்டக் குலுக்கலுக்கு $5 மில்லியன் பரிசுத்தொகை

1 mins read
ஜனவரி 2ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு நடைபெறும்
d5bfbbd3-7840-44cd-ade4-89a3d45dcb24
$5 மில்லியன் பரிசுத்தொகை கொண்ட புத்தாண்டுக்கான (2026) டோட்டோ அதிர்ஷ்டக் குலுக்கல் வெள்ளிக்கிழமை (ஜனவரி 2) நடைபெறும். - படம்: சிங்கப்பூர் பூல்ஸ்

சிங்கப்பூர் பூல்ஸ் நிறுவனம், 2026க்கான புத்தாண்டு அதிர்ஷ்டக் குலுக்கல், வெள்ளிக்கிழமை (ஜனவரி 2) நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணிக்கு மிடில் ரோட்டில் அமைந்துள்ள சிங்கப்பூர் பூல்ஸ் கட்டடத்தில் அந்த அதிர்ஷ்டக் குலுக்கல் நடைபெறும் என்று அதன் இணையத்தளத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கு 30 நிமிடங்கள் முன்னதாக அதிர்ஷ்டச் சீட்டு விற்பனை முடிவடையும்.

$10, $20 அதிர்ஷ்டச் சீட்டுகளின் விற்பனை திங்கட்கிழமை (டிசம்பர் 29, 2025) மாலை 6.10 மணிக்குத் தொடங்கும் என்று கூறப்பட்டது.

இந்த ஆண்டுக்கான (2025) புத்தாண்டு அதிர்ஷ்டக் குலுக்கலில் வெற்றியாளர் $5.5 மில்லியன் பரிசுத்தொகை பெற்றது நினைவுகூரத்தக்கது.

குறிப்புச் சொற்கள்