டோட்டோ: ஒரே வெற்றிச்சீட்டுக்கு $12.2 மில்லியன்

1 mins read
1bb9ef7f-53da-48bb-9234-2ff39360f019
நவம்பர் 6ஆம் தேதி லக்கி பிளாசாவில் உள்ள சிங்கப்பூர் பூல்ஸ் கடையில் தங்களுடைய அதிர்ஷ்டத்தைச் சோதிப்பதற்காக வரிசையில் நின்றிருந்த மக்கள்.  - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
நவம்பர் 6ஆம் தேதி லக்கி பிளாசாவில் உள்ள சிங்கப்பூர் பூல்ஸ் கடையில் பலர் தங்களுடைய அதிர்ஷ்டத்தைச் சோதிப்பதற்காக வரிசையில் நின்று டோட்டோ சீட்டுகளை வாங்கினர்.
நவம்பர் 6ஆம் தேதி லக்கி பிளாசாவில் உள்ள சிங்கப்பூர் பூல்ஸ் கடையில் பலர் தங்களுடைய அதிர்ஷ்டத்தைச் சோதிப்பதற்காக வரிசையில் நின்று டோட்டோ சீட்டுகளை வாங்கினர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நவம்பர் 6ஆம் தேதி நடைபெற்ற டோட்டோ குலுக்கலில் ஒரே வெற்றிச்சீட்டுக்கு 12,286,496 மில்லியன் வெள்ளி பரிசு விழுந்துள்ளது. இருந்தாலும் குறைந்தது 11 பேர் பரிசைப் பகிர்ந்துகொள்வார்கள் எனக் கூறப்படுகிறது.

கடந்த மூன்று குலுக்கல்களில் யாருக்கும் முதல் பரிசு கிடைக்காததால் நான்காவது குலுக்கலில் முதல் பரிசு 12 மில்லியன் வெள்ளிக்கு அதிகரித்தது.

வெற்றி எண்கள் 3, 20, 24, 29, 32, 44, கூடுதல் எண் 46.

வெற்றிச்சீட்டு, 12 எண்களைக் கொண்ட ‘ஐடோட்டோ’ என்று சிங்கப்பூர் பூல்ஸ் தெரிவித்தது.

12 எண்களைக் கொண்ட ஐடோட்டோ பொதுவாக 33 வெள்ளிக்கு விற்கப்படுகிறது.

வெற்றி எண்களைக் கொண்ட வெற்றிச்சீட்டுகளைப் பத்து இடங்களில் உள்ள கடைகளிலும் சிங்கப்பூர் பூல்ஸ் இணையம் வழியாகவும் அதிர்ஷ்டசாலிகள் வாங்கியிருக்கின்றனர். அதாவது குறைந்தது 11 பேர் அதே வெற்றி எண்களைக் கொண்ட வெற்றிச்சீட்டை வாங்கியுள்ளனர்.

கடந்த மாதம் 27ஆம் தேதி டோட்டோ முதல் பரிசு ஏறக்குறைய 1.2 மில்லியன் வெள்ளியாக இருந்தது. அப்போதிலிருந்து முதல் பரிசு யாருக்கும் கிடைக்காததால் நவம்பர் 6ஆம் தேதி குலுக்கலில் பரிசுத் தொகை 10 மில்லியன் வெள்ளிக்கு அதிகரித்தது.

கடைசியாக அக்டோபர் 23ஆம் தேதி டோட்டோ குலுக்கலில் முதல் பரிசு பத்து மில்லியன் வெள்ளியாக இருந்தது. அப்போது மூன்று வெற்றிச் சீட்டுகளுக்கு 12.4 மில்லியன் வெள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு சீட்டுக்கும் 4.1 மில்லியன் வெள்ளி கிடைத்தது.

குறிப்புச் சொற்கள்