டோட்டோவில் தொடர்ந்து மூன்று குலுக்கல்களில் முதல் பிரிவு வெற்றியாளர்கள் இல்லாததால், மே 4ஆம் தேதிக்கான டோட்டோ பரிசுத்தொகை $10 மில்லியனாக உயர்ந்துள்ளது.
அன்று இரவு 9:30 மணிக்கு குலுக்கல் நடைபெறும்.
வியாழக்கிழமை (ஏப்ரல் 30) குலுக்கலின் வெற்றி எண்கள் 2, 6, 7, 31, 35, 39, கூடுதல் எண் 15.
அந்தக் குலுக்கலில் முதல் பிரிவிற்கான பரிசுத் தொகை $5,742,496 ஆக இருந்தது. முன்னதாக ஏப்ரல் 23 ஆம் தேதி $1.2 மில்லியனாக இருந்த பரிசுத் தொகை, ஏப்ரல் 27 குலுக்கலில் $2.9 மில்லியனாக உயர்ந்தது.
டோட்டோ விதிகளின்படி, நான்கு முறை தொடர்ச்சியாக வெற்றியாளர் இல்லையெனில், நான்காவது குலுக்கல் முதல் பிரிவில் யாரும் வெற்றி பெறவில்லை என்றால், அந்தப் பெரும் தொகை இரண்டாம் பிரிவு வெற்றியாளர்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்படும்.
ஜனவரி 29ஆம் தேதி நடைபெற்ற இதேபோன்ற குலுக்கலில், $13.5 மில்லியன் பரிசுத் தொகையை ஆறு பேர் பகிர்ந்துகொண்டனர்.

