செந்தோசா, சிராங்கூன் கார்டன்சில் சுற்றுப்பயணி அடித்த கொள்ளை

செந்தோசா, சிராங்கூன் கார்டன்சில் சுற்றுப்பயணி அடித்த கொள்ளை

1 mins read
$105,000 மதிப்பிலான பொருள்கள் திருடப்பட்டன
6cd8465c-0397-466a-8ad4-64f6639bca22
அந்த சுற்றுப்பயணி சீனாவைச் சேர்ந்தவர். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூருக்கு முதன்முறையாகப் பயணம் மேற்கொண்ட ஆடவர் ஒருவர், பணம் சம்பாதிப்பதற்காக வீடுகளில் கொள்ளையடிக்கத் திட்டமிட்டிருந்தார்.

சீனாவைச் சேர்ந்த ஹுவாங் சியாவ்ஸோங் எனும் 41 வயது ஆடவர், திருடுவதற்காக சிங்கப்பூரில் செல்வந்தர்கள் அதிகம் வாழும் பகுதிகளை அடையாளம் கண்டார். செந்தோசா, சிராங்கூன் கார்டன்ஸ் ஆகிய பகுதிகளில் காலியாக இருந்ததுபோல் தென்பட்ட வீடுகளை அவர் குறிவைத்தார்.

வீடுகளில் புகுந்து கொள்ளையடித்ததாகத் தன்மீது சுமத்தப்பட்ட இரு குற்றச்சாட்டுகளை ஹுவாங் வெள்ளிக்கிழமை (ஜூலை 10) ஒப்புக்கொண்டார். அவருக்கு வரும் ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும்.

ஹுவாங் சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் ஐந்தாம் தேதி சிங்கப்பூர் வந்தார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அவர் லிட்டில் இந்தியா வட்டாரத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்குவதற்குப் பதிவுசெய்திருந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

3‌0,000 வெள்ளி மதிப்புகொண்ட ஷனெல் (Chanel) கைக்கடிகாரம், 25,000 வெள்ளி மதிப்பிலான ஐந்து மோதிரங்கள், 3,000 வெள்ளி மதிப்பிலான தங்கச் சங்கிலி, மேலும் 47,000 வெள்ளி மதிப்பிலான நகைகள் போன்றவற்றை அவர் திருடியிருக்கிறார்.

தங்களுக்குக் கிடைத்த புகார்களைக் கொண்டு காவல்துறை, ஹுவாங்கை அடையாளம் கண்டு டிசம்பர் மாதம் எட்டாம் தேதி கைது செய்தது. அவர் கொள்ளையடித்த பொருள்களின் மொத்த மதிப்பு 105,000 வெள்ளியாகும்.

குறிப்புச் சொற்கள்