வழிநடுவே பேருந்து ஓட்டுநர்களை மாற்றும் டவர் டிரான்சிட்

வழிநடுவே பேருந்து ஓட்டுநர்களை மாற்றும் டவர் டிரான்சிட்

1 mins read
c119ba0d-84be-4d9b-b9cc-bee5105884a4
பரிந்துரைகளுக்கு இணங்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பொதுப்பேருந்துச் சேவையை நடத்தும் நான்கு நிறுவனங்களில், பயணம் நடுவே ஓட்டுநர்களை மாற்றி நீண்ட நேரம் பேருந்து ஓட்டுவோருக்கு ஓய்வு கொடுக்கும் முறையை முதன்முதலாக டவர் டிரான்சிட் சிங்கப்பூர் கையாள்கிறது.

வளைவுச் சேவையான 858 சேவை எண் பேருந்துகளுக்கு டவர் டிரான்சிட், இந்த முறையைச் செயல்படுத்துகிறது.

858 சேவை செல்லும் தூரம், 73.4 கிலோமீட்டர். இதுவே, சிங்கப்பூரிலுள்ள பொதுப்பேருந்து சேவைகளில் ஆக தூரமானது. மொத்தம் மூன்று மணி நேரம் நீடிக்கும் இச்சேவையின் பயணம், சிங்கப்பூரிலிருந்து பேருந்து வழியாக மலாக்கா செல்லும் நேரத்திற்கு ஈடானது என்று ஓட்டுநர்கள் கூறுகின்றனர்.

பொதுப்பேருந்துச் சேவையின் பாதுகாப்பை கூர்ந்து ஆராயும் பணிக்குழுவின் பரிந்துரைகளுக்கு இணங்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு மணி நேரத்திற்கு மேல் புதிய பயணப் பாதைகளைச் சேர்க்கவேண்டாம் என்று அந்தக் குழு, நிலப்போக்குவரத்து ஆணையத்தை ஊக்குவித்துள்ளது.

“நெடிய பயணங்களால் கவனம் சிதறலாம். பேருந்து ஓட்டுநர்களுக்கு மன உளைச்சல் ஏற்படலாம். இதனால் விபத்துகள் உண்டாகும் அபாயங்கள் ஏற்படுகின்றன,” என்று மார்ச் 5ஆம் தேதி அந்தக் குழு வெளியிட்ட அறிக்கை ஒன்று குறிப்பிடுகிறது.

குறிப்புச் சொற்கள்