ஆபத்து ஏற்படுத்தக்கூடிய துணி அடுக்கு அகற்றம்

1 mins read
b617be16-802f-4ef9-8f8f-fc4f76ddbf53
சேகார் ரோடு, புளோக் 470ன் கீழ்த்தளத்தில் காணப்பட்ட துணி உலர்த்தும் அடுக்கு. - படம்: ஸ்டோம்ப்

ஹாலந்து-புக்கிட் பாஞ்சாங் நகர மன்றம், சேகார் ரோடு, புளோக் 470ன் கீழ்த்தளத்திலிருந்து ஆபத்தை விளைவிக்கக்கூடிய துணி அடுக்கு ஒன்றை அகற்றியுள்ளது.

ஜூலை 4ஆம் தேதியன்று அந்தத் துணி உலர்த்தும் அடுக்கை குடியிருப்பாளர் ஒருவர் கண்டார்.

“முதியோர் யாரும் இங்கு நடக்கக்கூடாது என்று வேண்டுகிறேன். கண்பார்வை மங்கியவர்கள் அதனை மோதினால், அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்படவேண்டிய நிலை ஏற்படலாம்,” என்றார் அவர்.

“பொதுமக்கள் பாதுகாப்பைக் கருதி, நகர மன்றம் அந்தத் துணி அடுக்கை அகற்றியுள்ளது,” என்று ஹாலந்து-புக்கிட் பாஞ்சாங் நகர மன்றப் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

“நாங்கள் சம்பந்தப்பட்ட குடியிருப்பாளர்களைத் தொடர்புகொள்வோம். தங்களின் பொருளை எவ்வாறு பெற்றுக்கொள்ளலாம் என்று அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படும்,” என்றார் அவர்.

“பொது இடங்களில் இடையூறு ஏற்படுத்தவேண்டாம் என்று அனைத்துக் குடியிருப்பாளர்களிடமும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். அனைவருக்கும் பாதுகாப்பான சூழலை அமைக்க, உங்கள் ஒத்துழைப்பு மிக முக்கியம்,” என்று பேச்சாளர் கூறினார்.

குடியிருப்பாளர்கள் அனைவரின் நலனையும் உறுதிப்படுத்த, நகர மன்றம் தொடர்ந்து நிலைமையை அணுக்கமாகக் கண்காணிக்கும் என்றும் அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்