தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘டார்கெட்’ நிறுவனத்துடன் வர்த்தக முத்திரை மோதல்: ஆட்குறைப்பு செய்யும் ‘ஒப்பன்’

1 mins read
95f03137-2996-4474-a0bd-caaf6730b1d9
ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யும் நடவடிக்கைகளிலும் ‘ஒப்பன்’ ஈடுபட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்தார். - படம்: ஒப்பன்

சிங்கப்பூர் உள்நாட்டு நிறுவனமான ‘ஒப்பன்’, அதன் வலைத்தளத்திலும் சமூக ஊடகங்களிலும் தங்கள் தயாரிப்புகள் குறித்து பகிர்ந்த தகவல்களை முற்றிலுமாக நீக்கியுள்ளது.

அமெரிக்க சில்லறை விற்பனை நிறுவனமான ‘டார்கெட்’ உடன் வர்த்தக முத்திரை தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இந்த நடவடிக்கையை அந்நிறுவனம் எடுத்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யும் நடவடிக்கைகளிலும் ‘ஒப்பன்’ ஈடுபட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

பாரிசைத் தளமாகக் கொண்டு செயல்படும் அந்த வர்த்தகத்திற்காகச் சிங்கப்பூரில் 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பணியாற்றியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் அதன் நிறுவனரும் சிங்கப்பூரருமான நிக்கோலஸ் டான் கூறினார்.

அனைத்துலகப் பிரபலங்களிடையே தங்கள் உயர்ரக தோல் கைப்பைகளுக்குப் பிரபலமான ‘ஒப்பன்’ நிறுவனம் 2022ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

‘டார்கெட்’ நிறுவனத்தின் உள்ளாடைகள், உறங்கும்போது உடுத்திகொள்ளும் ஆடைகள் ஆகியவற்றின் தயாரிப்பான ‘ஒட்டன்’ வர்த்தக முத்திரைக்கும் ‘ஒப்பன்’ வர்த்தக் முத்திரைக்கும் இடையே குழப்பம் நிலவி வருகிறது.

இதன் காரணமாகவே அமெரிக்கா உட்பட அனைத்துலக அளவில் தனது வர்த்தக முத்திரையைப் பதிவு செய்வதற்கான ‘ஒப்பன்’ நிறுவனத்தின் முயற்சியை ‘டார்கெட்’ தடுத்துவருகிறது.

இதற்கிடையே, “100 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஒரு பெரிய நிறுவனம் வளர்ந்துவரும் ஒரு சிறிய வர்த்தகத்தை நசுக்குகிறது என ‘ஒப்பன்’ நிறுவனர் செப்டம்பர் 8ஆம் தேதி தமது இன்ஸ்டகிராமில் பதிவிட்டிருந்தார்.

குறிப்புச் சொற்கள்