ஜூ சியாட் வட்டாரத்தில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 3) நிகழ்ந்த சாலைப் பணி விபத்தில் 66 வயது போக்குவரத்துக் கட்டுப்பாட்டு ஊழியர் மாண்டார்.
சாலையைச் சீர்செய்யும் இயந்திரத்தை கவனக்குறைவுடன் இயக்கி மரணம் விளைவித்ததற்காக 39 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார்.
இந்தத் தகவலைக் காவல்துறை வெளியிட்டது.
மாலை 4 மணி அளவில் கார்ப்மேல் சாலையில் விபத்து நிகழ்ந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கும் சிங்கப்பூர் காவல்துறைக்கும் தகவல் கிடைத்தது.
போக்குவரத்துக் கட்டுப்பாட்டு ஊழியர் சம்பவ இடத்திலேயே மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

