போக்குவரத்து குற்றங்களைப் புரிந்ததாக நால்வர் மீது நவம்பர் 13ஆம் தேதியன்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த நால்வரும் அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டி பிறருக்குக் காயம் விளைவித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த வெவ்வேறு சம்பவங்களில் பாதிக்கப்பட்டோர் தொடர்பான விவரங்கள் நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்படவில்லை.
குற்றச்சாட்டை எதிர்நோக்குபவர்களில் சீன நாட்டவரான 42 வயது லீ டான்பிங்கும் ஒருவர்.
அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டி பிறருக்குக் காயம் விளைவித்ததாக லீ மீதும் மியன்மார் நாட்டவரான 64 வயது கியாவ் மோ மீதும் குற்றம் சுமத்தப்பட்டது.
இருவரும் சிங்கப்பூர் நிரந்தரவாசிகள்.
சாலையைப் பயன்படுத்துவோர் பற்றி சிறிதும் யோசிக்காமல் அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டி பிறருக்குக் காயம் விளைவித்ததாக சிங்கப்பூரர்களான 34 வயது சியூ பாய் லாங், 55 வயது முகம்மது ஷாரின் சம்சுதீன் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
2024ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் சாலை விபத்துகளில் காயம் அடைந்தோர் எண்ணிக்கை 4,629ஆக அதிகரித்தது.
தொடர்புடைய செய்திகள்
2023ஆம் ஆண்டு அதே காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 4,522ஆக இருந்தது.
சிவப்பு போக்குவரத்து விளக்கில் நிறுத்தாமல் வாகனத்தைத் தொடர்ந்து செலுத்தி விபத்தை ஏற்படுத்தியோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
2023ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இக்குற்றத்தை 59 பேர் புரிந்தனர்.
2024ஆம் ஆண்டு அதே காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 45ஆகக் குறைந்தது.


