புதிய மின்சார கார்களை அறிமுகம் செய்யவிருக்கும் போக்குவரத்துக் காவல்துறை

1 mins read
d8dd4481-fd7b-4b98-9d34-ee1a48a3a00e
போக்குவரத்துக் காவல்துறை கூடிய விரைவில் போல்ஸ்டார் ரக மின்சாரக் கார்களைப் பயன்படுத்தவிருக்கிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர்ப் போக்குவரத்துக் காவல்துறையின் விரைவுச் சாலைக் கண்காணிப்பில் 19 அதிவேக மின்சாரக் கார்கள் கட்டங்கட்டமாக அறிமுகம் செய்யப்படவிருக்கின்றன.

இவ்வாண்டு பிற்பாதியிலிருந்து மின்சாரக் கார்கள் அறிமுகம் செய்யப்படும்.

தற்போதிருக்கும் மின்சார கார்களின் எண்ணிக்கையை அதிகரிக்க 2023ஆம் ஆண்டு குத்தகைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதையடுத்து விரைவுச் சாலைகளுக்கு ஏற்ப போல்ஸ்டார் 2 (Polestar 2) மின்சாரக் கார்கள் பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்டன.

புதிய மின்சார கார்கள் பயன்பாட்டுக்கு வருவதன் மூலம் உள்துறை அமைச்சின் சீருடைப் பிரிவுகளில் மின்சாரக் கார்களைப் பயன்படுத்தும் முதல் பிரிவு சிங்கப்பூர்க் காவல்துறையாக இருக்கும்.

போக்குவரத்துக் காவல்துறை அதிகாரிகள் தற்போது பயன்படுத்தும் பிஎம்வி, வொல்வோ ரக கார்களுடன் ஒப்பிடுகையில் போல்ஸ்டார் 2 இன்னும் துரிதமாகச் செல்லக்கூடியது. அது 100 கிலோமீட்டர் வேகத்தை கிட்டத்தட்ட நான்கரை விநாடிகளில் தொட்டுவிடும் ஆற்றல் கொண்டது.

ஏப்ரல் 10ஆம் தேதி போக்குவரத்துக் காவல்துறைத் தலைமையகத்தில் நடைபெற்ற முன்னோட்ட நிகழ்ச்சியில் விவரங்கள் அறிவிக்கப்பட்டன.

போல்ஸ்டர் மின்சார கார்களின் சக்கரங்களில் காற்று போனாலும் 80 கிலோமீட்டர் வரை அதை ஓட்டி செல்லக்கூடிய அம்சம் உள்ளது.

பொதுமக்களுக்கு விற்கப்படும் போல்ஸ்டர் 2 ரக மின்சார கார்களில் அத்தகைய அம்சம் இல்லை.

பாதுகாப்புக்காக, காருக்குள் ஏற்கெனவே பொறுத்தப்பட்டுள்ள இணையத் தொடர்பு அம்சம் அகற்றப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டிலிருந்து சிங்கப்பூர்க் காவல்துறை அவசர சேவை கார்களில் புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்திவருகிறது. புதிய போல்ஸ்டர் 2 ரக மின்சாரக் கார்களிலும் அத்தகைய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

குறிப்புச் சொற்கள்