தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அங் மோ கியோ அவென்யூ 1ல் ஏற்பட்ட விபத்தால் நிலைகுத்திய போக்குவரத்து

1 mins read
d5f32bbb-d2a2-4e28-b6e6-c8dc7313d997
திங்கட்கிழமையன்று (அக்டோபர் 6) காலை 7.45 மணியளவில் உச்சநேரத்தில் நேர்ந்த இச்சம்பவத்தால் மத்திய விரைவுச்சாலை வரை வாகனங்கள் நிலைகுத்தி நின்றன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர்

அங் மோ கியோவில் இரு மோட்டார்சைக்கிள், மூன்று கார்கள் ஆகிய ஐந்து வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் 39 வயது மோட்டர்சைக்கிளோட்டி காயமடைந்தார்.

திங்கட்கிழமையன்று (அக்டோபர் 6) காலை 7.45 மணியளவில் உச்சநேரத்தில் நேர்ந்த இச்சம்பவத்தால் மத்திய விரைவுச்சாலை வரை வாகனங்கள் நிலைகுத்தி நின்றன.

பௌண்டரி ரோடு நோக்கிசெல்லும் அங் மோ கியோ அவென்யூ 1ல் ஏற்பட்ட இவ்விபத்து குறித்து தமது ‘எக்ஸ்’ தளத்தில் நிலப் போக்குவரத்து ஆணையம் பதிவிட்டது.

அதில், சம்பவம் நேர்ந்த பகுதியில் உள்ள இரண்டாம் மற்றும் மூன்றாம் வழித்தடங்களைப் பயன்படுத்த வேண்டாம் என வாகனமோட்டிகளை அது அறிவுறுத்தியது.

விபத்து நடந்த பிறகு எடுக்கப்பட்ட புகைப்படத்தில் இரண்டாம், மூன்றாம் வழித்தடங்களில் மூன்று கார்கள் நிற்பதையும் அவ்விருபாதைகளுக்கு இடையே இரு மோட்டர்சைக்கிள்கள் விழுந்து கிடப்பதையும் காண முடிந்தது.

வழித்தடம் ஒன்றில் மட்டும் வாகனம் செல்வதையும் சம்பவம் நடந்த இடத்தில் இரு அவசர மருத்துவ உதவி வாகனத்தையும் அதில் பார்க்கலாம்.

கூடுதல் விவரங்களுக்காகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தொடர்புகொண்டுள்ளது.

காவல்துறை விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்