தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரயில், பேருந்துச் செயல்பாட்டு நேரம் நீட்டிப்பு

1 mins read
69b9f81c-5a8d-4379-a116-9fd384daac96
ஏப்ரல் 30ஆம் தேதியன்று, டௌன்டவுன், வடக்கு-கிழக்குப் பாதையில் ரயில் சேவைகள் கிட்டத்தட்ட அரை மணி நேரம் நீட்டிக்கப்படும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தொழிலாளர் தினப் பொது விடுமுறைக்கு முந்திய நாள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவோர் வழக்கத்திற்கு மாறாக சற்று பின்னேரத்தில் ரயில் அல்லது பேருந்துச் சேவைகளைப் பயன்படுத்தலாம்.

எஸ்பிஎஸ் டிரான்சிட், குறிப்பிட்ட சில சேவைகளை நீட்டிக்கவிருப்பதே அதற்குக் காரணம்.

ஏப்ரல் 30ஆம் தேதியன்று, டௌன்டவுன், வடக்கு-கிழக்குப் பாதையில் ரயில் சேவைகள் கிட்டத்தட்ட அரை மணி நேரம் நீட்டிக்கப்படும் என்று எஸ்பிஎஸ் டிரான்சிட் தெரிவித்தது.

டௌன்டவுன் பாதையில், எக்ஸ்போ நிலையத்தை நோக்கிச் செல்லும் கடைசி ரயில் புக்கிட் பாஞ்சாங் நிலையத்திலிருந்து நள்ளிரவு 12.03 மணிக்குப் புறப்படும். மற்றொரு திசையில் உள்ள கடைசி ரயில் நள்ளிரவு 12.04 மணிக்குப் புறப்படும்.

வடக்கு-கிழக்குப் பாதையில், பொங்கோலை நோக்கிச் செல்லும் கடைசி ரயில் ஹார்பர்ஃபிரண்ட் நிலையத்திலிருந்து நள்ளிரவு 12.30 மணிக்குப் புறப்படும். மற்றொரு திசையில் உள்ள கடைசி ரயில் நள்ளிரவு 12.02 மணிக்குப் புறப்படும்.

செங்காங்-பொங்கோல் இலகு ரயில் சேவை, வடக்கு-கிழக்குப் பாதையின் கடைசி ரயில்கள் நகர நிலையங்களைச் சென்றடையும்வரை நீட்டிக்கப்படும்.

ரயில் செயல்பாட்டு நேரங்களோடு ஒத்துப்போக, எஸ்பிஎஸ் டிரான்சிட்டின் பின்வரும் சேவைகளுக்கான கடைசிப் பேருந்துப் புறப்பாட்டு நேரங்களும் நீட்டிக்கப்படும்.

60A, 63M, 114A, 181, 222, 225G, 228, 229, 232, 238, 240, 241, 243G, 291, 292, 293, 315, 325, 410W, 804, 812, 974A ஆகியவையே அவை.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்