உட்லண்ட்ஸ் நார்த் எம்ஆர்டி நிலையத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 18) இரவு ரயில் சேவையில் கோளாறு ஏற்பட்டதால் தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் சேவை தடைப்பட்டது.
ரயில் சேவை கோளாறு பற்றி ரயிலிலும் ரயில் நிலையத்திலும் அறிவிப்புகள் ஒலிபரப்பாகின.
ரயில்கள் அதனால் தாமதமடைந்தன.
லென்டோர் எம்ஆர்டி நிலையத்திலேயே இரவு 7.40 மணியளவில் ரயில் 15 நிமிடங்கள் நின்றதைத் தமிழ் முரசு செய்தியாளர் கண்டறிந்தார். அதன் பின்பு, ரயில் இடையிடையே நின்று அடுத்த ரயில் நிலையத்துக்கு நகர்ந்து சென்றது. இரவு 8 மணியளவிலும் ரயில் சேவையில் தாமதம் நீடித்தது.

