இரண்டாம் உலகப்போரில் மடிந்த சீக்கிய வீரர்களுக்கு கிராஞ்சியில் அஞ்சலி

இரண்டாம் உலகப்போரில் மடிந்த சீக்கிய வீரர்களுக்கு கிராஞ்சியில் அஞ்சலி

2 mins read
72ba89ae-4eee-4c22-8177-47639110987e
சட்ட, போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் முரளி பிள்ளையும் கிராஞ்சி போர் நினைவிடத்தில் உரையாற்றினார்.  - படம்: சட்ட அமைச்சு
multi-img1 of 4

இரண்டாம் உலகப்போரில் சிங்கப்பூரை தற்காக்கப் போராடிய பல வீரர்களில் இந்தியாவில் இருந்து பிரிட்டிஷ் ராணுவம் அழைத்து வந்த சீக்கியப் படையினரும் முக்கிய அங்கம் வகித்தனர்.

ஜப்பானியத் தாக்குதலில் இங்கு உயிரிழந்த வீரர்களுக்கென கிராஞ்சியில் போர் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 24,000 உயிரிழந்த வீரர்களுக்கு தனிப்பட்ட கல்லறைகள் இல்லை. அவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட 12 பொதுக் கல்லறைகளே உள்ளன. அந்தப் பெயர்களில் 3,318 வீரர்களின் பெயர்கள் ‘சிங்’ என்று முடிவுறும். அவர்கள் சீக்கிய இனத்தைச் சார்ந்தவர்கள் என்பது நம்பிக்கை.

பிளவுபடாத இந்தியாவில் அப்போது இருந்த பஞ்சாப் மாநிலத்தின் பல பகுதிகளில் வாழ்ந்த அவர்கள் சிங்கப்பூருக்கும் மலேயாவுக்கும் பிரிட்டிஷ் படையுடன் போரிட வந்திருந்தனர். அவர்களில் தொவாப் வட்டாரத்தில் இருந்து வந்த 559 சீக்கிய வீரர்களும் அடங்குவர்.

சிங்கப்பூர் சீக்கிய சமூகத்தின் மிகப் பழமையான பர்தேசி கல்சா தர்மாக் திவாக் அமைப்பு, 1926ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது. அந்த அமைப்பு ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 8) போரில் உயிர் நீத்த சீக்கிய வீரர்களுக்கு நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. அதன் நூற்றாண்டு நிறைவு கொண்டாட்டங்களின் அங்கமாக அது அமைந்தது.

ஏறத்தாழ 350 சிறப்பு விருந்தினர்கள் நிகழ்வில் கலந்துகொண்டனர். சீக்கிய சமூகத்தின் முன்னோடிகள், உள்ளூர், வெளிநாட்டு சீக்கியர்கள், பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், மலேசியா ஆகிய நாடுகளின் சிங்கப்பூருக்கான தூதர்கள் நிகழ்வில் அஞ்சலி செலுத்தினர்.

சட்ட, போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் முரளி பிள்ளையும் கிராஞ்சி போர் நினைவிடத்தில் உரையாற்றினார்.

குறிப்புச் சொற்கள்