நிலநடுக்கத்தால் பெரும் பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ள துருக்கிக்கும் சிரியாவிற்கும் சிங்கப்பூர் மக்கள் முடிந்த உதவிகளைச் செய்து வருகின்றனர்.
பிப்ரவரி 10 ஆம் தேதி சிங்கப்பூரில் உள்ள துருக்கி தூதரகத்தை அத்தியாவசிய பொருள்களால் நிரப்பினர் சிங்கப்பூர் மக்கள். பல தொண்டூழிய நிறுவனங்களும் பொதுமக்களிடம் இருந்து பணத்தையும் பொருள்களையும் வாங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுத்து உதவிவருகின்றன.
அதே நேரத்தில், போலியான கணக்குகள் சில சமூக ஊடகங்களில் பரவிவருகின்றன. அவற்றின் வழியாக நன்கொடைகள் கொடுத்து ஏமாறக்கூடாது என்பதிலும் மக்கள் கவனமாக உள்ளனர்.
சில நம்பகமான நன்கொடைத் தளங்கள்:
♦ சிங்கப்பூரில் உள்ள துருக்கி தூதரகம் சிங்கப்பூரில் செயல்படும் துருக்கிய தூதரகம் நன்கொடை தொடர்பான அறிவிப்புகளை அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு வருகிறது. தண்ணீர், உடை, மருந்து போன்ற அத்தியாவசியப் பொருள்களை அது அனுப்புகிறது. அங்கு பொதுமக்கள் மேல்விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம். (www.facebook.com/SingapurBE)
♦ சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் அதன் இணையத்தளம் வழியாக நன்கொடை வசூலிக்கிறது. மே 31 ஆம் தேதியுடன் அதன் நிதித்திரட்டு நடவடிக்கை நிறைவடைகிறது. (www.redcross.sg)
♦ Giving.sg
♦ Give.asia
♦ ஐக்கிய நாட்டுக் குழந்தைகள் நிதி (https://help.unicef.org/syria-emergency)