போக்குவரத்துக் காவல்துறையின் புதிய சோதனைக் கருவிமூலம் இருவர் கைது

2 mins read
105d43c4-ad2e-49e6-81e7-2eef2c153ccd
போக்குவரத்துக் காவல்துறை, உள்துறைக் குழுவின் அறிவியல், தொழில்நுட்ப அமைப்புடன் இணைந்து செப்டம்பர் 20ஆம் தேதி அதிகாலை, கையடக்க சுவாச சான்றுச் சோதனைக் கருவியைப் (Handheld Breath Evidential Analyser) பயன்படுத்தி நடத்திய சோதனையில் 43 வயது ஆடவர் மதுபோதையில் வாகனம் ஓட்டியதற்காகக் கைது செய்யப்பட்டார். - படம்: த.கவி
multi-img1 of 2

அப்பர் கிராஸ் ஸ்திரீட்டில் செப்டம்பர் 20ஆம் தேதி அதிகாலை போக்குவரத்துக் காவல்துறையினர் நடத்திய திடீர்ச் சோதனையில், மதுபோதையில் வாகனம் ஓட்டியதற்காக 43 வயது ஆடவரையும் 48 வயதுப் பெண்ணையும் கைதுசெய்தனர்.

புதிய கையடக்க சுவாச சான்றுச் சோதனைக் கருவியைக் (Handheld Breath Evidential Analyser) கொண்டு நடத்தப்பட்ட சோதனையில் அவர்கள் இருவரும் மதுபோதையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போக்குவரத்துக் காவல்துறை, செப்டம்பர் 5ஆம் தேதி முதல் உள்துறைக் குழுவின் அறிவியல், தொழில்நுட்ப அமைப்புடன் (HTX) இணைந்து இப்புதிய கருவியைச் சோதித்து வருகிறது.

போக்குவரத்துக் காவல்துறை, செப்டம்பர் 5ஆம் தேதி முதல் உள்துறைக் குழுவின் அறிவியல், தொழில்நுட்ப அமைப்புடன் இணைந்து புதிய கையடக்க சுவாச சான்றுச் சோதனைக் கருவியைத் (Handheld Breath Evidential Analyser) தன் செயல்பாடுகளில் சோதித்துவருகிறது.
போக்குவரத்துக் காவல்துறை, செப்டம்பர் 5ஆம் தேதி முதல் உள்துறைக் குழுவின் அறிவியல், தொழில்நுட்ப அமைப்புடன் இணைந்து புதிய கையடக்க சுவாச சான்றுச் சோதனைக் கருவியைத் (Handheld Breath Evidential Analyser) தன் செயல்பாடுகளில் சோதித்துவருகிறது. - படம்: த.கவி

இதற்கு முன் ஓட்டுநர்கள் சுவாச சோதனைக் கருவியில் (Handheld Breath Analyser) முன்னோட்ட சுவாச சோதனையை மேற்கொள்ளவேண்டியிருந்தது. சோதனையில் தோல்வியடைந்தோர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு, சுவாச சான்று ஆய்வுக் கருவி (Breath Evidential Analyser Machine) மூலம் இரண்டாவது சோதனை மேற்கொள்ளப்படும்.

இதற்கு முன் ஓட்டுநர்கள் முன்னோட்ட சுவாச சோதனையை மேற்கொள்வர். அதில் தோல்வியடைந்தோர், கைது செய்யப்பட்டு, இரண்டாவது சுவாச சான்றுச் சோதனை மேற்கொள்ளப்படும்.
இதற்கு முன் ஓட்டுநர்கள் முன்னோட்ட சுவாச சோதனையை மேற்கொள்வர். அதில் தோல்வியடைந்தோர், கைது செய்யப்பட்டு, இரண்டாவது சுவாச சான்றுச் சோதனை மேற்கொள்ளப்படும். - படம்: த.கவி

புதிய கருவிமூலம் இரண்டாவது சுவாச சோதனைக்கான தேவை நீக்கப்பட்டுள்ளது. சுவாசத்தில் மதுபான அளவு குறையுமுன் துல்லியமான மதிப்பீடுகளை உறுதிசெய்வதால் இச்சோதனை சட்ட விசாரணைக்கு ஆதாரமாகவும் செல்லுபடியாகும்.

ஜனவரி மாதத்துக்கும் ஜூலைக்கும் இடையே ஓட்டுநர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 1,023 பேர் கைதுசெய்யப்பட்டனர். இது 2024ன் அதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 6.6 விழுக்காடு அதிகம்.

மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக முதன்முறை குற்றம் நிரூபிக்கப்பட்டால் $2,000 முதல் $10,000 வரையிலான அபராதமோ அதிகபட்சம் 12 மாதச் சிறைத்தண்டனையோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படலாம்.

இரண்டாவது அல்லது அடுத்தடுத்த முறை குற்றம் புரிவோர்க்கு $5,000 முதல் $20,000 வரையிலான அபராதமும், அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் கட்டாயச் சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம். இதனுடன், அனைத்து ரக வாகனங்களையும் ஓட்டுவதற்கான உரிமத்தையும் இழக்க நேரிடலாம்.

ஓட்டுநர்களுக்கான அனுமதிக்கப்பட்ட மது வரம்பில் எந்த மாற்றமும் இல்லை. மதுவின் அளவு 100 மில்லிலிட்டர் சுவாசத்துக்கு 35 மைக்ரோகிராம் அல்லது 100 மில்லிலிட்டர் ரத்தத்துக்கு 80 மில்லிகிராம் என்ற வரம்பை மீறக்கூடாது.

“நீங்கள் மது அருந்தத் திட்டமிட்டால், வாகனம் ஓட்டாதீர்கள். பொதுப் போக்குவரத்து, டாக்சி அல்லது மற்றோர் ஓட்டுநருடன் வீட்டுக்குச் செல்லுங்கள்,” என்றார் போக்குவரத்துக் காவல்துறைச் செயலாக்கப் பிரிவுத் தலைவர் முகமது ஃபிர்தாவுஸ் அப்துல் ரவுப்.

Watch on YouTube
குறிப்புச் சொற்கள்