பேருந்து-லாரி மோதல்; இருவர் காயம்

1 mins read
b194384a-f542-43c9-aabe-6e73c3f781ec
பேருந்தின் வலப்பக்கம் கனரக லாரி மோதியதைக் காட்டும் படங்கள் ஊடகத் தளங்களில் காணப்பட்டன. படம்: ஃபேஸ்புக் -

பிடோக் நார்த் ரோடும் காக்கி புக்கிட் ரோடு 5ம் சந்திக்கும் இடத்தில் பேருந்து ஒன்றும் கனரக லாரி ஒன்றும் மோதிக் கொண்டதில் பேருந்தில் இருந்த இருவர் காயம் அடைந்தனர். காயம் அடைந்த 45 வயது மாதும் 63 வயது ஆடவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த விபத்து திங்கட்கிழமை காலை 8.30 மணிக்கு நிகழ்ந்ததாகத் தகவல் கிடைத்தது என்றும் புலன்விசாரணை தொடர்வதாகவும் காவல்துறை தெரிவித்தது.

பேருந்தின் வலப்பக்கம் கனரக லாரி மோதியதைக் காட்டும் படங்கள் ஊடகத் தளங்களில் காணப்பட்டன.