சிராங்கூன் கார்டன்சில் டிசம்பர் 22ஆம் தேதி இரண்டு சைக்கிள்களும் டாக்சியும் மோதிய விபத்து குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. இதில் 32 வயது டாக்சி ஓட்டுநர் உதவி வருகிறார்.
சிராங்கூன் கார்டன் சர்க்கஸ் நோக்கிச் செல்லும் சிராங்கூன் கார்டன் வேயில் விபத்து நிகழ்ந்தது. காவல்துறைக்கும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கும் இது குறித்து பிற்பகல் 12.40 மணிக்குத் தகவல் கிடைத்தது.
விபத்தில் சிக்கிய 19, 49 வயது இரண்டு சைக்கிளோட்டிகள் சுயநினைவுடன் டான் டோக் செங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிங்கப்பூர் ரோட்ஸ் ஆக்ஸிடண்ட்.காம் இணையத் தளத்தில் பதிவேற்றப்பட்ட காணொளியில் டாக்சி தலைகீழாகக் கவிழ்ந்து கிடந்தது. போக்குவரத்து விளக்குக் கம்பம் ஒன்று இடித்து சாய்க்கப்பட்டிருந்தது. சைக்கிள் தரையில் கிடந்தது.