தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விபத்தில் சிக்கிய இரு ஓட்டுநர்கள் போதைப் பொருள் குற்றத்துக்காக கைது

2 mins read
413cf3d9-316e-4ebf-a39c-38bf1f8ddcce
120 ஹவ்காங் அவென்யூவில் உள்ள பெர்டோல் நிலையத்திற்கு அருகில் நள்ளிரவுக்குப் பின் 12.15 மணியளவில் விபத்து நேர்ந்தது.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஹவ்காங்கில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 30) நள்ளிரவு நேர்ந்த விபத்து ஒன்றில் சம்பந்தப்பட்ட ஓட்டுநர்கள் போதைப் பொருள் தொடர்பான குற்றங்களுக்காகக் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

120 ஹவ்காங் அவென்யூ 2இல் உள்ள பெட்ரோல் நிலையத்திற்கு அருகில் நள்ளிரவுக்குப் பின் 12.15 மணியளவில் விபத்து நேர்ந்தது. அதில் சாம்பல் நிற டொயோட்டா கார் நின்றுகொண்டிருந்த மஸ்டா கார்மீது மோதியதாகச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் குறிப்பிட்டனர்.

விபத்தில் டொயோட்டா கார் கவிழ்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

விபத்து ஏற்படுத்திய பலத்த சத்தத்தைக் கேட்ட பெட்ரோல் நிலைய ஊழியரான 64 வயது திரு இசா, கவிழ்ந்திருந்த டொயோட்டா ஓட்டுநர் காருக்குள் சிக்கியிருப்பதைக் கண்டார். அதையடுத்து ஓட்டுநரைத் திரு இசா காருக்குள்ளிலிருந்து வெளியே இழுத்தார். ஓட்டுநருக்கு எந்தக் காயமும் ஏற்படாதது போல தோன்றியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

- படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சம்பவத்தைப் பார்த்த குடியிருப்பாளர் ஒருவர், மஸ்டா காரிலிருந்து வெளியே ஓடிய ஆடவர் அருகில் உள்ள புளோக்கிற்கு ஓடிசென்று எதையோ வீச முற்பட்டது போல தென்பட்டதாகக் கூறினார். அந்த ஆடவர் மஸ்டா காரின் ஓட்டுநர் என்று பின்னர் தெரியவந்தது.

சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் ஓட்டுநருக்கு லேசான காயங்கள் இருந்ததாகக் கூறினர். அதையடுத்து ஓட்டுநர் தம்மை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வேண்டாம் என்றார்.

நள்ளிரவுக்குப் பின் 1.40 மணியளவில் காவல்துறை அதிகாரிகள் டொயோட்டா கார் ஓட்டுநரை விசாரித்து ஆடவரிடம் சோதனை மேற்கொண்டனர். அப்போது போதைப் பொருள் என்று நம்பப்படும் துகள்கள் போன்ற பொருள் ஆடவரிடம் கண்டுபிடிக்கப்பட்டது.

- படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஆடவர் உடனடியாகக் கைதுசெய்யப்பட்டார். கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் கழித்து காவல்துறை அதிகாரிகள் மஸ்டா ஓட்டுநரையும் கைதுசெய்தனர்.

அந்த ஓட்டுநரின் காரிலிருந்து அதிகாரிகள் பல மின்சிகரெட்டுகள் இருந்த பையை எடுத்தனர். அந்த மின்சிகரெட்டுகளில் எட்டோமிடேட் கலந்திருப்பதாக நம்பப்படுகிறது.

28 வயது மஸ்டா ஓட்டுநர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது, போதைப் பொருள் தொடர்பான குற்றங்கள் ஆகியவற்றுக்காகக் கைதுசெய்யப்பட்டதாகக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

போதைப் பொருள் தொடர்பான குற்றங்களைப் புரிந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் 40 வயது டொயோட்டா கார் ஓட்டுநர் கைதானார்.

அதிகாரிகளின் விசாரணை தொடர்கிறது.

- படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
குறிப்புச் சொற்கள்