வாட்டர்லூ ஸ்திரீட் ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலுக்கு அருகிலுள்ள சீன ஆலயத்திற்கு வெளியே தன்னருகே தன்னருகில் நின்றிருந்த ஒருவருடன் தனிநபர் நடமாட்ட சாதனத்தைப் பயன்படுத்தும் மற்றொருவர் கைகலப்பில் ஈடுபடும் காட்சி, காணொளியாகப் பதிவானது.
டோனோவன் என்பவர், ஸ்டாம்ப் தளத்தில் பகிர்ந்த அந்தக் காணொளியில், நடமாட்டச் சாதனத்தில் அமர்ந்திருந்த முதியவர் ஒருவர் மற்றவரின் முகத்தில் குத்தியதும் குத்தப்பட்டவர் தரையில் விழுந்ததும் தெரிகிறது.
சண்டை போட்ட இருவருமே அங்கு டிஷுத்தாள் விற்க வந்தவர்கள் எனக்கூறப்பட்டது.
இருவருக்கும் எப்படி வாக்குவாதம் மூண்டது என்பது தெளிவாக தெரியவில்லை.
உதவிக்கான அழைப்பு மாலை 5 மணியளவில் வந்ததாக ஸ்டோம்ப் தளத்தின் கேள்விகளுக்குப் பதிலளித்த காவல்துறையினர் கூறினர்.
தாக்கப்பட்ட 74 வயது ஆடவர் சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
கைகலப்பில் சம்பந்தப்பட்ட 66 வயது ஆடவர் தற்போது விசாரணையில் உதவி வருகிறார்.