மெக்பர்சன் சாலை விபத்தில் மெர்சிடிஸ் கார் தலைகுப்புற கவிழ்ந்தது

மெக்பர்சன் சாலை விபத்தில் மெர்சிடிஸ் கார் தலைகுப்புற கவிழ்ந்தது

1 mins read
de2670c6-dddf-49eb-99db-025018a86435
விபத்தில் மெர்சிடிஸ் கார் தலைகுப்புற கவிழ்ந்தது. படம்: MSW/SGROAD BLOCKS/TRAFFIC -

மெக்பர்சனில் சனிக்கிழமை பிற்பகல் மூன்று கார்கள், ஒரு லாரி, ஒரு சைக்கிள் சம்பந்தப்பட்ட விபத்தில் இருவர் காயம் அடைந்துவிட்டனர்.

அந்த விபத்து, எண் 110 மெக்பர்சன் ரோடு அருகே பிற்பகல் சுமார் 3.35 மணிக்கு நிகழ்ந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 73 வயது கார் ஓட்டுநரான ஆடவர் ஒருவர். 59 வயது சைக்கிளோட்டியான மாது மற்றொருவர்.

விபத்து தொடர்பில் 51 வயது கார் ஓட்டுநர் ஒருவர் காவல்துறை விசாரணையில் உதவி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்