ஆர்ச்சர்ட் ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த ரயிலில் சண்டையிட்ட இரு ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் வியாழக்கிழமை (மே 11) இரவு நடந்தது.
ஆடவர்கள் சண்டையிட்டுக்கொள்ளும் காணொளி வெள்ளிக்கிழமை அன்று சமூக ஊடகங்களில் பரவியது.
காணொளியில் இரண்டு ஆடவர்களும் தங்களை மாறிமாறி தாக்கிக்கொள்வதைப் பார்க்க முடிந்தது.
இரண்டு பயணிகள் சண்டையைத் தடுக்க முயன்றனர். இருப்பினும் ஆடவர்கள் இருவரும் ஆக்ரோஷமாக சண்டையிட்டுக் கொண்டதால் அவர்கள் விலகினர்.
சம்பவம் குறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் காவல்துறையிடம் தகவல் கேட்டது.
அதற்குப் பதிலளித்த அதிகாரிகள் சம்பவம் தொடர்பாக ஆர்ச்சர்ட் ரயில் நிலையத்தில் இருந்து வியாழக்கிழமை இரவு 10:45 மணிபோல் தங்களுக்கு தகவல் வந்ததாகக் கூறினர்.
அதைத்தொடர்ந்து இரண்டு ஆடவர்களும் கைது செய்யப்பட்டதாகவும் அவர்களின் வயது 33, 35 என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
இருவரிடமும் அதிகாரிகள் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.


