தீவு விரைவுச்சாலை விபத்தில் இருவர் சிக்கினர்

1 mins read
33cf2589-4e7a-4250-9843-a69403c661d7
அக்டோபர் 22ஆம் தேதி பிற்பகல் 3.55 மணிவாக்கில் விபத்து குறித்து காவல்துறைக்கும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கும் தகவல் கிடைத்தது. - படம்: ஷின் மின் வாசகர்

தீவு விரைச்சாலையில் ஞாயிறு பிற்பகலில் ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து, ஆடவர் இருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

அவர்களின் கார்கள் தலைகீழாகக் கவிழ்ந்து கிடந்தன.

ஜூரோங் வெஸ்ட் அவென்யூ 1இன் வெளிவழிக்கு முன்னர், துவாசை நோக்கிச் செல்லும் தீவு விரைவுச்சாலையில் நிகழ்ந்த விபத்து குறித்து பிற்பகல் 3.55 மணிவாக்கில் காவல்துறைக்கும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கும் தகவல் கிடைத்தது.

53 மற்றும் 44 வயதான கார் ஓட்டுநர் இருவரும் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டபோது சுயநினைவுடன் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

விபத்தைக் கண்ட ஒருவர், ஷின் மின் சீன நாளிதழிடம் வழங்கிய படத்தில் கார் ஒன்று கருகிய நிலையில் இருந்ததுபோல் காணப்பட்டது.

காவல்துறை விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்
விபத்து