தீவு விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் தெம்பனிஸ் விரைவுச்சாலையின் சிலேத்தார் துணைவழிச் சாலைக்கு முன் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 15) விபத்து நேர்ந்தது.
இதில் இரு மோட்டார்சைக்கிளோட்டிகள் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். அவர்களில் 25 வயதுடைய ஒருவர் சுயநினைவுடன் இருந்தார் என்றும் 30 வயதுடைய மற்றவர் சுயநினைவு இழந்த நிலையில் இருந்தார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இதுபற்றிய கேள்விகளுக்கு பதிலளித்த குடிமைத் தற்காப்புப் படையும் காவல்துறையும் வெள்ளிக்கிழமை காலை 9.20 மணிக்கு தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகக் கூறினர்.
வாகனம் ஒன்றில் பொருத்தப்பட்ட கேமரா பதிவில் லாரி ஒன்று விரைவுச்சாலையில் செல்லும்பொழுது சறுக்கி இடதுகோடி தடத்தில் இருந்து தடம் மாறி இரண்டு மோட்டார்சைக்கிளோட்டிகள் மீது மோதுவது தெரிகிறது.
அதைத் தொடர்ந்து விபத்து நடந்த இடத்திலிருந்து தலைக்கவசம் ஒன்று உருண்டோடுவதும் பதிவில் தெரிகிறது.
காவல்துறை விசாரணை தொடர்கிறது.