சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தில் இரு புதிய நீதிபதிகள்

சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தில் இரு புதிய நீதிபதிகள்

1 mins read
3abe6e9e-811d-4d29-a02c-9fd0ee64a1d9
நீதிபதிகள் முகம்மது பைசால் முகம்மது அப்துல் காதர், சு‌ஷில் சுகுமாரன் நாயர் (வலது). - படம்: சிங்கப்பூர் நீதிமன்றம்

இரண்டு நீதிமன்ற ஆணையர்கள் சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளாகப் பொறுப்பேற்கவுள்ளனர்.

நீதிமன்ற ஆணையர்களான முகம்மது ஃபைசால் முகம்மது அப்துல் காதர், சு‌ஷில் சுகுமாரன் நாயர் ஆகியோர் திங்கட்கிழமை (மார்ச் 9) முதல் நீதிபதிகளாகப் பணியாற்றுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.

இரண்டு நீதிபதிகளையும் அதிபர் தர்மன் சண்முகரத்னம் தேர்ந்தெடுத்தார்.

திரு ஃபைசால், சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தில் 2005ஆம் ஆண்டு சட்டத்துறையில் இளநிலைப் பட்டம் பெற்றார். பின்னர் அவர் 2009ஆம் ஆண்டு ஹார்வர்ட் சட்டப்பள்ளியில் முதுநிலைப் பட்டம் பெற்றார்.

திரு ஃபைசால் 2005ஆம் ஆண்டு சட்டப் பணியில் சேர்ந்தார். அவர் 2007ஆம் ஆண்டு அரசாங்கத் தலைமைச் தலைமை வழக்கறிஞர் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டார். 2020ஆம் ஆண்டு அவர் மூத்த சட்ட ஆலோசகராக முன்னேறினார். பின்னர் 2024ஆம் ஆண்டு நீதிமன்ற ஆணையராகப் பொறுப்பேற்றார்.

அதேபோல் திரு நாயர் 1989ஆம் ஆண்டு சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை முடித்தார்.

1990ஆம் ஆண்டு முதல் அவர் சட்டத்துறையில் உள்ளார். தனியார் நிறுவனங்கள், நிதி, வேலையிடம், வங்கித் துறை எனப் பல வழக்குகளில் திரு நாயருக்கு அனுபவம் உள்ளது.

திரு நாயர் 2025ஆம் ஆண்டு நீதிமன்ற ஆணையராகப் பொறுப்பேற்றார்.

தற்போது சிங்கப்பூர் நீதிமன்றங்களில் மொத்தம் 35 நீதிபதிகள் உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்