குதிரை ஆண்டை முன்னிட்டு இரு புதிய அஞ்சல் தலைகள்

1 mins read
f3f5b2a0-fe17-4ed8-92a3-5c4c9e2e5002
குதிரை ஆண்டின் தொடக்கத்தை முன்னிட்டு சிங்போஸ்ட் புதிய இரண்டு அஞ்சல்தலைகளை வெளியிட்டுள்ளது. - படம்: சிங்போஸ்ட்

சீனப் பஞ்சாங்கப்படி இவ்வாண்டு குதிரை ஆண்டு. குதிரை ஆண்டின் தொடக்கத்தை முன்னிட்டு சிங்போஸ்ட் புதிய இரண்டு அஞ்சல்தலைகளை வெளியிட்டுள்ளது.

அதுகுறித்த தகவலை சிங்போஸ் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 20) வெளியிட்டது.

குதிரையுள்ள அஞ்சல் தலைகளின் விலை 62 காசு, $2 என இருக்கும். அவை ஜனவரி 23ஆம் தேதியிலிருந்து விற்கப்படும்.

சீனர்களின் ராசி முறைப்படி குதிரை ஏழாவது இடத்தில் உள்ளது. மொத்தம் 12 விலங்குகள் உள்ளன.

$4.85, $5.35, $19.15, $22.20 என்ற விலைகளில் நான்கு அஞ்சல்தலை உறைகளும், பரிசுகளும் விற்பனையில் உள்ளன.

புதிய அஞ்சல்தலைகளை சிங்போஸ்ட் நிறுவனத்தின் இணையப் பக்கத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம் அல்லது அதன் அலுவலகங்களில் வாங்கிக்கொள்ளலாம்.

குறிப்புச் சொற்கள்