சிராங்கூன் பெருவிரைவு ரயில் நிலையத்தில் கைகலப்பில் ஈடுபட்ட ஆடவர் இருவர் திங்கட்கிழமையன்று ( மார்ச் 23) கைது செய்யப்பட்டனர்.
வடகிழக்கு ரயில் பாதையில் உள்ள பெருவிரைவு ரயில் நிலையம் ஒன்றின் நடைமேடையில் இருவர் சண்டையிட்டதாக மார்ச் 23ஆம் தேதி மாலை 5.05 மணியளவில் தங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாகக் காவல்துறை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விக்குப் பதிலளிக்கையில் தெரிவித்தது.
மேலும், 25, 31 வயதுடைய அந்த ஆடவர் இருவர் கைகலப்பில் ஈடுபட்டதாகவும் சண்டையில் அவர்கள் இருவரும் காயமுற்றபோதும் மருத்துவமனை செல்ல மறுத்ததாகவும் அது கூறியது.
பொது இடத்தில் சண்டையிட்டதற்காக அவ்விருவரும் கைது செய்யப்பட்டனர்.

