ரெட்ஹில் குளோசில் உள்ள புளோக் 89ன் 11வது மாடி வீடு ஒன்றில் புதன்கிழமை இரவில் தீ மூண்டதை அடுத்து இரண்டு பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். சுமார் 30 பேர் வெளியேற்றப்பட்டனர்.
இதுபற்றி தெரிவித்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, வீட்டின் வரவேற்பு அறையின் ஒரு மூலையில் இருந்த பொருள்கள் தீப்பிடித்துக்கொண்டதால் விபத்து நிகழ்ந்ததாகத் தெரிவித்தது.
அணையாத சிகரெட், மெழுகுவர்த்தி போன்ற பொருள்களை வீட்டில் அங்கும் இங்கும் போட்டு அலட்சியமாக நடந்துகொள்ள வேண்டாம் என்று குடிமைத் தற்காப்புப் படை மக்களுக்கு ஆலோசனை கூறியது.

