பங்கு வர்த்தக மோசடியில் இருவர் குற்றவாளிகள்

பங்கு வர்த்தக மோசடியில் இருவர் குற்றவாளிகள்

1 mins read
54367788-3d82-41f8-afbb-1f2b8d0bdec6
பங்கு மதிப்பை செயற்கையாக உயர்த்துவதற்காக இருவர் போலியான பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டனர். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் பங்கு வர்த்தக மோசடியில் ஈடுபட்ட இருவர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

யூரோஸ்போர்ட்ஸ் குளோபல் எனும் ஆடம்பரக் கார் விநியோகிக்க நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பை செயற்கையாக உயர்த்துவதற்காக அவர்கள் போலியான பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டனர்.

பெஞ்சமின் வோங் என்று அழைக்கப்படும் வோங் சோவ் லின், பொய்யாக வர்த்தகம் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டார். அவருக்கு நான்கு வாரம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது என்று புதன்கிழமை (மே 27) வெளியிட்ட அறிக்கையில் காவல்துறை கூறியது.

அவரது முகவரான 47 வயது கிலியான் இசபெல் சியோவ் சியாங் சோக், தெரிந்தே பொய்யான வர்த்தகத்தில் அவருக்கு உதவியாக இருந்ததை ஒப்புக் கொண்டார். அவருக்கு 135,000 வெள்ளி (105,000 யுஎஸ் டாலர்) அபராதம் விதிக்கப்பட்டது.

2017 பிப்ரவரி 24க்கும் 2018 ஜனவரி 12க்கும் இடைப்பட்ட காலத்தில் யூரோஸ்போர்ட்ஸ் குளோபல் பங்குகளின் மதிப்பை உயர்த்துவதற்காக வோங் 77 பங்குவர்த்தக நாள்களில் வர்த்தகத்தில் ஈடுபட்டார்.

அவர் வாங்கிய பங்குகள் காரணமாக யூரோஸ்போர்ட்ஸ் பங்குகள் வழக்கத்திற்கு மாறாக இரண்டு விழுக்காடு முதல் 22 விழுக்காடு வரை அதிக விலையில் வர்த்தகம் முடிவுற்றது.

வோங் தனது பெரும்பாலான யூரோஸ்போர்ட்ஸ் பங்குகளை சியோவ் மூலம் வர்த்தகம் செய்தார். அப்போது சியோவ் சிஐஎம்பி செக்யூரிட்டியில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

குறிப்புச் சொற்கள்