சொத்துச் சந்தை ஆலோசனை நிறுவனமான இடிசியும் சொத்து நிறுவனமான ஆரஞ்சுடீயும் இணையவுள்ளதாக திங்கட்கிழமை (பிப்ரவரி 24) அவை தெரிவித்தன.
புதிய குழுமம், இந்த வட்டாரத்தின் ஆக விரிவான சொத்துச் சந்தை நிறுவனமாவதை இலக்காகக் கொண்டுள்ளது. தரகு, ஆலோசனைச் சேவைகளை வழங்கும் அக்குழுமத்தின் வாடிக்கையாளர்களில் சொத்து வாங்கும் தனிநபர்கள், பெரிய பணவசதியுடைய முதலீட்டாளர்கள், சொத்து மேம்பாட்டாளர்கள், பெரிய நிறுவனங்கள் உள்ளிட்டவை அடங்கும்.
இடிசி, ஆரஞ்சுடீ நிறுவனங்களின் இணைப்புக்குப் பிறகு, புதிய குழுமத்தில் 520க்கும் மேற்பட்ட ஊழியர்களும் ஏறக்குறைய 2,800 சொத்து முகவர்களும் இடம்பெறுவர். அக்குழுமம் மார்ச் 31க்குள் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதுவரை, இடிசியும் ஆரஞ்சுடீயும் எப்போதும்போல தனித்தனியாகச் செயல்படும்.

