தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கேலாங் வீவக குப்பை போடும் பகுதியில் இரண்டு முயல்கள் கைவிடப்பட்டன

2 mins read
b63f02fa-2c52-492b-92ea-483653516b76
இரண்டு முயல்களும் இப்போது பாதுகாப்பாக இருக்கின்றன என்று கூறப்பட்டது. - படங்கள்: எச்ஜே

கிறிஸ்துமஸ் தினம், டிசம்பர் 26 ஆகிய தேதிகளில் ஒரு ஜோடி இளம் பெண் முயல்கள் கேலாங் வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) பேட்டையில் உள்ள குப்பை போடும் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டன. அவை அவற்றின் உரிமையாளரால் கைவிடப்பட்டிருக்கூடும் என்று நம்பப்படுகிறது.

‘எச்ஜே’ என்று மட்டுமே அறியப்பட விரும்பும் மதர்ஷிப் வாசகர், டிசம்பர் 25 அன்று நண்பகல் வேளையில் கேலாங்கில் உள்ள புளாக் 5, பைன் குளோசில் கைவிடப்பட்ட முயல் பற்றி தனக்கு குறுஞ்செய்தி வந்ததாகக் கூறினார்.

ஒரு முயல் குப்பை போடும் பகுதிக்கு அருகே சில குழாய்களுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருந்தது என்றும் அது மிகவும் பயந்திருந்தது என்றும் அவர் கூறினார்.

ஒரு மணி நேரம் கழித்து அவரது கணவர் அங்கு சென்றபோது, ​​குப்பை போடும் பகுதியில் முயல் இருப்பதைக் கண்டார். அதன் அருகில் ஓர் அட்டைப் பெட்டி இருந்தது. அதில் ஒரு துண்டு ரொட்டி மற்றும் கொஞ்சம் தண்ணீர் இருந்தது.

அங்கிருந்து ஒட முயன்ற முயலை எச்ஜேயின் கணவர் அருகில் உள்ள பூங்காவுக்கு அருகில் பிடித்தார். அதன் உடலில் காயம் இல்லை என்றாலும் அது மிகவும் பயந்திருந்தது.

பின்னர் அவர்கள் எச்ஜே தொண்டூழியம் புரியும் ‘பன்னி வான்டர்லேண்ட்’ (Bunny Wonderland) குழுவை அழைத்து அதன் தலைமையகத்துக்கு முயல் கொண்டு செல்லப்பட்டது.

அதற்கு அடுத்த நாளான டிசம்பர் 26ஆம் தேதி, அதே பகுதியில் மற்றொரு முயல் திரிந்துகொண்டிருந்ததை அறிந்து விலங்குவதை தடுப்புச் சங்கம் (SPCA) அதைக் கைப்பற்றியது. அந்த முயலும் ‘பன்னி வான்டர்லேண்ட்’ குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.

“இதுபோன்ற விலங்குகள் நிராகரிக்கப்படும் சம்பவங்கள் தொடர்கின்றன என்று கூறிய எச்ஜே, இரண்டு முயல்களும் இப்போது பாதுகாப்பாக இருக்கின்றன என்றும் அவற்றின் உடல்நலத்தை விலங்கு மருத்துவர் கண்காணித்து வருவதாகவும் சொன்னார்.

மறுவாழ்வு மற்றும் கருத்தடை செய்யப்பட்ட பிறகு, அந்த முயல்கள் தத்தெடுப்புக்கு விடப்படும்.

குறிப்புச் சொற்கள்