இரண்டு வயதுப் பிள்ளைக்கு அரிய நோய்

இரண்டு வயதுப் பிள்ளைக்கு அரிய நோய்

படம்: எஸ்டி போட்டோ / லிம் யோஹுய்

19 Sep 2026 - 5:17 pm

3 mins read

தாயார் டிஸேன் வூவின் 20-வது வார மகப்பேற்றுக்கு முந்தைய பரிசோதனையின்போது, அவரது குழந்தை தேடன் ஹேமில்டன் ஹோவிடம் ஏதோ சரியில்லை என்பதை மருத்துவர் கவனித்தார்.

“அவனது தலை சராசரி அளவை விடச் சிறியதாக இருப்பதாகவும், அவனது சிறுமூளையின் (cerebellum) சுற்றளவு மிகவும் குறுகியிருப்பதாகவும் மருத்துவர் கூறினர்,” என்று 26 வயதான இல்லத்தரசியான டிஸேன் வூ தெரிவித்தார்.

அந்தத் தாயார் கருத்தரித்த 22வது வாரத்தில் பனிக்குட நீர் பரிசோதனைக்குச் (amniocentesis) சென்ற ஒரு வாரத்திற்குப் பிறகு, குழந்தை அந்தத் தாயாரிடமிருந்து பெறப்பட்ட ஒரு கூடுதல் குரோமோசோம் இருப்பது தெரிவிக்கப்பட்டது.

இப்பிரச்சினைகளின் காரணமாக கருக்கலைப்பு செய்வது குறித்த யோசனை மருத்துவர்கள் தனக்கும் தமது கணவரிடமும் முன்வைத்ததாக அந்தத் தாயார் கூறினார்.

“ஆனால், அவன் எங்களுடைய குழந்தை என்பதால் கருக்கலைப்பு செய்வது குறித்து நாங்கள் ஒருமுறைகூட யோசிக்கவில்லை,” என்று வூ கூறினார்.

குழந்தைக்கு 15 மாதங்கள் ஆனபோது மூன்று பேரின் ரத்த மாதிரிகளும் அமெரிக்காவிற்குப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட பிறகு, அவனுக்கு ‘ஸிடிடிகே’ (ZTTK) சிண்ட்ரம் என்ற அரியவகை நோய் இருப்பது கண்டறியப்பட்டது.

இந்த பாதிப்பு, பாலினமற்ற குரோமோசோமில் உள்ள ஒரு மரபணுவில் ஏற்படும் மாற்றத்தால் உண்டாகும் இந்தப் பரம்பரை நோய், மூளை வளர்ச்சியைப் பாதிக்கிறது.

இது அண்மையில் கண்டறியப்பட்ட பாதிப்பு என்பதால், உலகில் எத்தனை பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற புள்ளிவிவரங்கள் எதுவும் இல்லை என்று கே கே பெண்கள், சிறார் மருத்துவமனையின் மரபியல் மருத்துவத் துறை ஆலோசகர், மரபியல் நிபுணர் ஜேனெட் கோ தெரிவித்தார்.

கிட்டத்தட்ட 400 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுவதாக அவர் கூறினார்.

வூவின் மகப்பேற்று, பெண்நோயியல் நிபுணர் டோனி டான், அவரை டாக்டர் கோவிடம் பரிந்துரைத்திருந்தார்.

“ZTTK சிண்ட்ரோம் மிகவும் அரிதானது என்பதாலும், இதன் அறிகுறிகள் பிற நரம்பியல் பாதிப்புகளுடன் ஒத்துப்போவதாலும், இந்த நோயைக் கண்டறியாமல் விடுவதற்கோ, தவறாகக் கணிப்பதற்கோ அல்லது கண்டறியப்படாமல் போவதற்கோ வாய்ப்புகள் அதிகம்,” என்று கோ கூறினார்.

தேடனுக்கு இந்நோய் இருப்பது கண்டறியப்பட்டபோது, தானும் தனது கணவரும் உணர்ச்சிப் போராட்டத்தில் சிக்கியதாக வூ கூறினார்.

“எனது நிலையால்தான் அவனுக்கு இந்தப் பாதிப்பு வந்தது என்பதை நினைத்து வருந்தினேன். அதே நேரத்தில், தேடனின் பிரச்சினைக்கு என்ன காரணம் என்பதை இறுதியாகக் கண்டறிந்துவிட்டோம் என்பதில் எங்களுக்கு மகிழ்ச்சியாகவும் இருந்தது. அவனது பிசியோதெரபிஸ்டுகளிடமிருந்தும் எங்களுக்கு நிறைய உதவிகள் கிடைத்தன, அவனை எவ்வாறு கையாள்வது என்று அவர்கள் எங்களுக்குக் கற்றுக் கொடுத்துள்ளனர்,” என்று அவர் கூறினார்.

தேடன் இப்போது சிங்கப்பூரில் உள்ள ‘விங்ஸ் தெரப்பி அண்ட் லேர்னிங் சென்டரில்’ தனது உடலமைப்பு, உடல் கட்டுப்பாட்டின் மேம்பாடு, ஒட்டுமொத்த இயக்கச் செயல்பாடு ஆகியவற்றுக்கு வாரம் இருமுறை இயன்முறை மருத்துவப் பயிற்சிக்குச் செல்கிறான்.

“ஜூன் மாதத்தில் தீவிரப் பயிற்சிகளைத் தொடங்கினோம். அந்தப் பயிற்சிகள் அவனுக்கு மிகவும் உதவியாக இருந்தது. முன்பு செய்ய முடியாத பலவற்றை இப்போது அவனால் செய்ய முடிகிறது. முன்பு அவன் மிகவும் தளர்வாக இருப்பான், அவனது தலைக் கட்டுப்பாடும் மிகவும் பலவீனமாக இருந்தது. இப்போது அவனால் குறிப்பிட்ட நேரம் தனியாக நிமிர்ந்து உட்கார முடிகிறது,” என்று வூ கூறினார்.

குறிப்புச் சொற்கள்
கருக்கலைப்புமருத்துவர்குழந்தைதாய்