வாகனங்களுக்கான சக்கரங்களை விநியோகம் செய்யும் ‘டாம் டயர்’ நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்த டாமினிக் குவேக் சுன் ஹூவா என்னும் ஆடவர் ஊழல் செய்த குற்றத்திற்காக 30,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
டாமினிக் ‘சாட்ஸ்’ நிறுவனத்தில் உள்ள லியோங் என்னும் ஊழியர் ஒருவருக்கு கடன் உதவி வழங்கி, அவர் மூலம் ‘சாட்ஸ்’ நிறுவனத்தின் குத்தகை தொடர்பான தகவல்களை பெற்றுள்ளார்.
2020ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2021ஆம் ஆண்டு ஜனவரி வரை மூன்று தவணைகளாக 9,500 வெள்ளியை கடனாகக் கொடுத்தார் டாமினிக்.
லியோங் தொடர்பான வழக்கு விசாரணை தொடர்கிறது. அவர் தற்போது ‘சாட்ஸ்; நிறுவனத்தில் இல்லை.
தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை டாமினிக் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். அதைத் தொடர்ந்து அவருக்கு புதன்கிழமை (ஜூன் 26) தண்டனை விதிக்கப்பட்டது.

